» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழக மக்களுக்காக கமல், ரஜினி என்ன செய்தார்கள்? நடிகர் சந்திரசேகர் எம்எல்ஏ., கேள்வி

புதன் 14, பிப்ரவரி 2018 10:34:04 AM (IST)தமிழக மக்களுக்காக கமல், ரஜினி என்ன செய்தார்கள்? யார் அரசியலுக்கு வந்தாலும் முதலமைச்சராக வரப்போவது ஸ்டாலின்தான் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகர் வாகை. சந்திரசேகர் பேசினார். 

தமிழகத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்திய அதிமுக அரசை கண்டித்து தூத்துக்குடியில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் விவிடி சிக்னல் அருகில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ., தலைமையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக மாநில கலை இலக்கி பகுத்தறிவு பேரவைச் செயலாளர் வாகை.சந்திரசேகர் எம்எல்ஏ., கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

அப்போது அவர் பேசுகையில் இன்றைக்கு ஆட்சியா நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது காஞ்சி மடம் அமர்ந்திருக்கிறது. தேசிய கீதம் பாடும்போது எழுந்திருக்கிறது. தமிழுக்கு எங்கெல்லாம் அபத்து வந்திருக்கிறது என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் பெயர் மாற்றப்பட்டு இருக்கிறது. இது எல்லாம் திமுக ஆட்சியில் இருந்தால் நடக்குமா? சினிமாத்துறை மூலம் இன்னொரு பேராபத்து வந்து கொண்டிருக்கிறது. வயதிருக்கும் வரை ஆடி தீர்த்துவிட்டு, பணம் மற்றும் புகழை சம்பாதித்துவிட்டு 69வது வயதில் அரசியலுக்கு வருகிறார்கள். 

கமல், ரஜினி என்ன யார் வந்தாலும் தமிழகத்தில் முதலமைச்சராக வரப்போவது ஸ்டாலின் மட்டும் தான். தமிழக மக்களுக்காக இவர்கள் இருவரும் இதுவரை என்ன செய்தார்கள்? ஸ்டாலின் தன்னுடைய 14 வயதில் அரசியலுக்கு வந்தவர். சினிமா மாதிரி வசனம் பேசியிடலாம் என்று எண்ணி அரசியலுக்கு வந்து விடாதீர்கள். வந்தால் தெளிவான கருத்தை கூறுங்கள். ஒருவர் ஆன்மீகம் என்கிறார், மற்றொருவர் காவியோடு சேரமாட்டேன் என்கிறார். நீங்கள் சொல்வதையெல்லாம் மக்கள் நம்ப மாட்டார்கள்.பின்வழி வழியாக அரசியலுக்கு வர விரும்பாதவர் ஸ்டாலின். விரைவில் எடப்பாடி அரசு கவிலும், பின்பு தோதல் வரும் அப்போது திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றார். 

கூட்டத்தில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ., காங்கிரஸ் மாநகர தலைவர் சி.எஸ்.முரளிதரன், மதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மார்க்ஸிட் மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், இந்திய கம்யூனிஸ்ட் ஞானசேகரன், விடுதலைகள் சிறுத்தை மத்திய மாவட்ட செயலாளர் கா.அகமது இக்பால், இந்திய யூனியன் முஸ்லீம்லிக் மாவட்ட செயலாளர் மீராசா, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், சமத்துவ மக்கள் கட்சி ராஜ்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தர்மராஜ், மாவட்ட கலை இலக்கி பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் சரத்பாலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals


Joseph Marketing


Thoothukudi Business Directory