» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பொதுமக்களை போராட்டத்திற்கு தூண்டிய 8 பேர் கைது

புதன் 14, பிப்ரவரி 2018 10:17:53 AM (IST)தூத்துக்குடியில் பொதுமக்களை போராட்டத்திற்கு தூண்டிவிட்டதாக 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரெட்டியார்புரம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் 271 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்நிலையில் பொதுமக்களை போராட்டத்திற்கு தூண்டியதாக போராசிரியை பாத்திமா பாபு உள்பட 8பேரை தென்பாகம் போலீசார் கைது செய்தனர். 

பின்னர் 8பேரும் தூத்துக்குடி ஜே.எம். 3 நீதிபதி வீட்டில் நீதிபதி ரோஸ் கலா முன் ஆஜர் படுத்தப்பட்டனர். இதையடுத்து 8 பேரையும் வரும் 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைதொடர்ந்து அவர்களை பலத்த போலீசார் பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர். நீதிபதி வீட்டில் இருந்து வெளியே வந்தபோது ஸ்டெர்லைட்ஆலைக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 263 பேரும் திருமண மண்டபத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து

கணேஷ்Feb 15, 2018 - 10:11:19 AM | Posted IP 27.62*****

தேதிவாரியா பாருங்க மக்களே.

TamilFeb 15, 2018 - 10:00:19 AM | Posted IP 157.5*****

Tuty online name vachu mukkiyamana news podala

எல்லோரும் போல் ஒருவன்Feb 14, 2018 - 11:43:06 AM | Posted IP 61.2.*****

ஒரு நியூஸ் ஐ எப்புடி சொல்லணும்ங்கிறதா உங்க கிட்ட தான் கத்துக்கன்னும், பிறர் மனதை புண்படுத்த கூடிய கருத்துக்களை பயன் படுத்த வேண்டாம் னு நீங்களே மேல போட்டுட்டு ஒட்டு மொத்த தூத்துக்குடி மக்கள் மனதை EASY AH காயப்படுத்திடீங்க

ஒருவன்Feb 14, 2018 - 11:36:42 AM | Posted IP 61.2.*****

நேற்று போராட்டம் நடந்ததை செய்தியா போடல

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

crescentopticalsFriends Track CALL TAXI & CAB (P) LTDNew Shape Tailors

Joseph Marketing
Thoothukudi Business Directory