» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீடுகளில் 14 பவுன் நகை திருடிய சிறுவன் கைது

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 5:27:25 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில் வீடுகளில் 14 பவுன் நகை திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர். 

ஏரல் ஆற்றுப் பாலம் பகுதியில் எஸ்ஐக்கள் சரவணன், அனிதா, சுந்தரராஜன் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது சந்தேகத்தின் பேரில் ஒரு நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர், ஏரல் அருகே உள்ள சேதுக்கு வாய்த்தான் கிராமத்தைச் சேர்ந்த விஜயராஜ் மகன் சத்திய முருகேசன் (17), என்பதும், ஏரல் பகுதிகளில் வீடுகளில் நகை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து முருகேசனை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

குரும்பூர் அருகே அழகு ராஜா என்பவர் வீட்டில் 7 பவுன் நகை, காரவிளை சின்னத்துரை என்பவர் வீட்டில் 7பவுன் நகை, ஏரல் அருகே அருகே மொட்டதான்விளை  முருங்கை விவசாயி முத்துராஜா, என்பவர் வீட்டில் ரூ.11ஆயிரம் பணம், ஒரு ஜோடி வெள்ளிக் கம்மல் ஆகியவற்றை விசாரணையில் திருடியது தெரிவந்தது. இதையடுத்து முருகேசன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த நகை, பணத்தை போலீசார் மீட்டனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட முருகேசன், பின்பு பாளை இளம் சிறார் சிறையில் அடைக்கப்பட்டான். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads


crescentopticals





Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing

New Shape Tailors



Thoothukudi Business Directory