» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாகனம் மோதி பெண் லேப் டெக்னீஷியன் உயிரிழப்பு

திங்கள் 12, பிப்ரவரி 2018 5:00:23 PM (IST)

கோவில்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் லேப் டெக்னீஷியன் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த சத்திரப்பட்டி கீழக் காலனியைச் சேர்ந்தவர் தங்கராஜ். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள், சுகந்தி (23), கோவில்பட்டியில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்றிரவு பணி முடிந்து கோவில்பட்டியில் இருந்து பேருந்தில் சத்திரப்பட்டிக்குச் சென்றார். 

சத்திரப்பட்டி விலக்கு அருகே பேருந்திலிருந்து இறங்கிய இவர், சாலையைக் கடக்க முயலும் போது அடையாளம் தெரியாத வாகனம் சுகந்தி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் தெரிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற நாலாட்டின்புத்தூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads



Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors

crescentopticals





Johnson's Engineers




Thoothukudi Business Directory