» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே லாரி மீது பைக் மோதி கணவன்-மனைவி உட்பட 4பேர் காயம்

ஞாயிறு 11, பிப்ரவரி 2018 4:45:52 PM (IST)

தூத்துக்குடி அருகே சாலையோரத்தில் நிறுத்தியிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மேதியதில் கணவன், மனைவி மற்றும் 2 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், எப்போதுவென்றான் பகுதியை சார்ந்த இரும்பு வியாபாரி ராஜ்குமார். இவர் தனது மனைவி விஜயலெட்சுமி, மகன்கள் பிரசன்னா மற்றும் ஹரிபிரசாத் ஆகிய நால்வரும் மோட்டார் சைக்கிளில் எப்போதுவென்றானில் இருந்து தூத்துக்குடி அருகே உள்ள குறுக்குச்சாலை அருகே வரும் பொழுது அங்கு சாலையோரத்தில் நிறுத்தியிருந்த கண்டெய்னர் லாரி மீது நிலைதடுமாறி மோதியதில் நால்வருக்கும் தலையில் அடிபட்டு லாரியின் அடியில் மாட்டிக்கொண்டனர். 

இதையறிந்த அப்பகுதி மக்கள் ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் நால்வரையும் மீட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும்,  இவ்விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் டீ குடிப்பதற்காக லாரி டிரைவர்கள் சாலையின் இரு பக்கங்களிலும் பெரும்பாலும் லாரிகளை நிறுத்திவிட்டு செல்வதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Friends Track CALL TAXI & CAB (P) LTD




crescentopticals





Thoothukudi Business Directory