» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போலி ஏடிஎம் கார்டு மூலம் லட்சக்கணக்கில் கொள்ளை : இரண்டு பேர் கைது

வெள்ளி 9, பிப்ரவரி 2018 6:11:01 PM (IST)
துாத்துக்குடி அருகே தலைமைஆசிரியை ஏடிஎம் கார்டை பயன்படுத்தி  லட்சக்கணக்கில் மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் இதில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகின்றனர்.

துாத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரத்தை சேர்ந்த செல்லத்துரை மகள் கஸ்துாரிபாய்.இவர் அங்குள்ள எலியட் டக்ஸ் போர்டு பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலைபார்த்து வருகிறார்.இவர் உடன்குடியிலுள்ள ஸ்டேட் பாங்க்கில் ஏடிஎம் கார்டு பயன்படுத்தி வரவு செலவு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 16 மற்றும் 17 ம் தேதிகளில் 4 முறையாக தலா 40 ஆயிரம் வீதம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அவரது கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளதாக அவரது செல்போன்க்கு எஸ்எம்எஸ் வந்துள்ளது.தான் பணம் எடுக்காத நிலையில் மோசடியாக பணம் எப்படி எடுக்கப்பட்டது ? எனவே மர்ம நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு கஸ்துாரிபாய் துாத்துக்குடி எஸ்பி மகேந்திரனிடம் புகார் அளித்துள்ளார்.

மாவட்ட எஸ்பி உத்தரவின்படி துாத்துக்குடி குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் விஜயஅனிதா இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில் திருச்சி கேகே நகரை சேர்ந்த சிவனேஸ்வரன் மகன் கிஷோக் அதே பகுதியை சேர்ந்த வின்சென்ட்பால் மகன் ஜெனோபர் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து இந்த மோடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை ஆரெம்கேவி கடைக்கெதிரே உள்ள ஸ்டேட்பாங்க் திருவாங்கூர் வங்கி ஏடிஎம் சென்டரில் கேமரா மற்றும் ஏடிஎம் கார்டு சொருகும் இடத்தில் ஸ்கிம்மர்கருவி பொருத்தி அதன் மூலம் வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டுசொருகி பணம் எடுக்கையில் அவர்களின் ஏடிஎம் தகவலை பதிவு செய்துள்ளனர்.

பின்னர் அதை வைத்து போலி ஏடிஎம் கார்டுகள் தயாரித்து பணம் எடுத்துள்ளனர்.இது போல் பல்வேறு ஊர்களில் போலி ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுத்து மோசடி செய்துள்ளனர்.மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்க்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கிஷோக் மற்றும் ஜெனோபர் துாத்துக்குடி டிஎஸ்எப் பிளாசா அருகே இருப்பதாக தகவல் கிடைத்தது.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இன்று குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்தி அவர்கள் மறைத்து வைத்திருந்த ஸ்கிம்மர் கேமரா,ஸ்கேனர்,செல்போன்கள் போலி ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.பின்னர் நீதிமன்ற காவலுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த போலி ஏடிஎம் கார்டு கும்பல் திருநெல்வேலி மன்னார்குடி ஆகிய இடங்களிலும் இந்த மோடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.இதில் தொடர்புடைய மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.குற்றவாளிகளை கைது செய்து குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் அனிதா மற்றும் குழுவை எஸ்பி மகேந்திரன் பாராட்டி பரிசு வழங்கினார்.


மக்கள் கருத்து

GunaFeb 13, 2018 - 05:51:33 PM | Posted IP 82.17*****

ஸ்டெர்லைட் எதிரான போராட்டம் பற்றிய தகவல் ஏன் வரவில்லை ? மீடியாவை கிழிக்கிறாங்கன்னா அது சரிதான்.

makkalFeb 10, 2018 - 04:18:00 PM | Posted IP 59.93*****

super

kesavanFeb 9, 2018 - 09:53:03 PM | Posted IP 157.5*****

super

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals

Joseph Marketing

CSC Computer Education

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory