» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இலங்கை பிரிகேடியரை நாடு கடத்த இந்தியா குரல் கொடுக்க வேண்டும் : வைகோ பரபரப்பு பேட்டி!

புதன் 7, பிப்ரவரி 2018 7:40:19 PM (IST)



தமிழர்களை பார்த்து கழுத்தை அறுத்துவிடுவதாக மிரட்டிய இலங்கை பிரிகேடியரை நாடு கடத்த இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என கோவில்பட்டியில் மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மதிமுக பொது செயலாளர் வைகோ தனது உதவியாளர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இலங்கை தமிழர்கள் இனப்படுகொலைக்கு காரணமான சிங்கள, கொலைகார அரசை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும். தமிழர் பகுதியில் சிங்கள இராணுவம் வெளியேற வேண்டும். லட்சக்கணக்கான தமிழகர்களின் படுகொலைக்கு நீதி வேண்டும்.

இந்நிலையில் லண்டனில் கடந்த 4 தேதி இலங்கை சுதந்திரதினத்தன்று, இனப்படுகொலைக்கு நீதி கேட்டு, இலங்கை தூதரகத்தற்கு எதிரே லண்டனில் வாழக்கூடிய ஈழத்தமிழர்கள் அமைதியான ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அப்போது தூதுவரோடு வெளியே வந்த பிரிகேடியர் ப்ரியங்காப்ரணப், கழுத்தை அறுப்பேன் என்று தமிழர்களை பார்த்து தனது கையினால் சைகை மூலம் சொல்லியுள்ளார். 

இதற்கு பிரிட்டிஷ் பார்லிமெண்டில் அங்குள்ள எம்.பிக்கள் கண்டனம் தெரிவித்து அவரது விசாவை பறித்து, நாடு கடத்த வேண்டும் என்று பார்லிமெண்டில் பிரச்சினையை கிளப்பியுள்ளனர். ராஜபக்சே லண்டன் சென்ற போது வெளியே வரவிடமால் பல்லாயிரகணக்கான தமிழர்கள் திரண்டு விரட்டினார்கள். இந்த கட்டத்தில் லண்டனில் உள்ள எம்.பிக்கள் குரல் கொடுத்துள்ள ஆறுதல் தருகிறது. 

தமிழர்களை மிரட்டிய பிரிகேடியரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்று இந்தியரசு குரல் கொடுக்க வேண்டும். நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எல்லா விதத்திலும் சிங்கள அரசுககு உதவியாக இருந்து கொண்டு, நம்முடைய மீனவர்கள் எல்லையை தாண்டினார்கள் என்று கூறி கோடிக்கணக்கான ரூபாய் அபராதம், 3 ஆண்டு சிறை என்ற சட்டத்தினை நிறைவேற்றியுள்ளது. இதனை இந்தியரசு கண்டிக்கவில்லை.

அண்ணாதிமுக அரசு மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வருகிறது. திமுக தலைமையில் கட்டண உயர்வினை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு 6 லட்சத்திற்கு மேல் கைது செய்யப்பட்டு, அடைத்து வைக்க சிறைகள் இல்லாத காணரத்தினால் விடுவிக்கப்பட்டனர். 

தற்போது கோவில்பட்டியில் சொத்து வரியை மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட நிர்வாகம் இல்லாத போது, இவர்களாகவே வரியை அதிகரித்து வசூலிப்பதை மதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்து கண்டன போர்டுகள், தெருமுனைக்கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். உயர்த்தப்பட்ட வரி வசூலிக்க கூடாது, வசூல் செய்தததை திருப்பி கொடுக்க வேண்டும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD



crescentopticals



Joseph Marketing

New Shape Tailors



Thoothukudi Business Directory