» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அம்மா வாகன தி்ட்டத்தில் தகுதியுள்ள எவரும் விடுபட கூடாது : ஆட்சியர் அறிவுரை

புதன் 7, பிப்ரவரி 2018 12:33:18 PM (IST)தகுதியுள்ள பெண்கள் எவரும் விடுபடாத வகையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கிட வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் தலைமையில், அம்மா இருசக்கர வாகனம் வழங்குவது குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம், (6.2.2018) அன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தமிழக அரசு பெண்களின் பயண நேரம் குறைக்கும் வகையில், மகளிர் திட்டத்தின் மூலம், மானியம் ரூ.25 ஆயிரத்துடன் அம்மா இருசக்கர வாகனம் என்ற சிறப்பு திட்டத்தினை அறிவித்து, அதனை உடனடியாக அனைத்து மாவட்டத்திலும் செயல்படுத்திட வேண்டும் என ஆணையிட்டுள்ளது. 

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனம் வேண்டி 22.1.2018 முதல் பணிபுரியும் பெண்களிடமிருந்து இதுவரை 7330 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. குறிப்பாக தகுதியான பெண்கள் எவரும் விடுபடாத வகையில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சரியான முறையில் கள ஆய்வுகளை மேற்கொண்டு உடனடியாக மாவட்ட குழு அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் அம்மா இருசக்கர வாகனம் வேண்டி விண்ணப்பிக்க கால அவகாசத்தினை தமிழக அரசு 10.2.2018 வரை நீட்டிப்பு செய்துள்ளது. இதனை தகுதியுள்ள பெண்கள் இத்திட்டத்தின வழிமுறைகளை தெரிந்து கொண்டு, விண்ணப்ப படிவங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் அளித்து பயன்பெற வேண்டும் - என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வே.பிச்சை, கோவில்பட்டி நகர் மன்ற ஆணையர் அச்சையா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பி.ஜே.ரேவதி, உதவி இயக்குநர்கள் ஜார்ஜ் மைக்கேல் ஆண்டனி (ஊராட்சிகள்), மாகின் அபுபக்கர் (பேரூராட்சிகள்), செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தி.நவாஸ்கான், வட்டார போக்குவரத்து அலுவலர் க.ரெங்கநாதன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) காமராஜ், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கீதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயல் அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

crescentopticals
New Shape Tailors

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Thoothukudi Business Directory