» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு சித்ரவதை : கணவன் உட்பட 8 பேர் மீது வழக்கு

செவ்வாய் 23, ஜனவரி 2018 11:04:46 AM (IST)

ஆத்தூர் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த கணவன் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அடுத்த தெற்கு மரந்தலையைச் சேர்ந்தவர் பிரபா (29). இவருக்கும்,  ஆறுமுகநேரி அடுத்த பேயன்விளையைச் சேர்ந்த துரைசாமியின் மகன் மாருதிராஜாவுக்கும் கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் 15ல் திருமணம் நடந்தது. இவர், சென்னை குளத்தூரில் ஹார்டுவேர் இரும்பு கடையில் வேலை செய்து வருகிறார். திருமணத்தின் போது 28 பவுன் நகை, ரூ.1 லட்சம், மேலும் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சீர்வரிசையாக மணமகள் வீட்டினர் வழங்கினராம். திருமணத்துக்கு பிறகு  தம்பதியர் சென்னையில் குடியேறினார். இவர்களுக்கு  15 மாத பெண் குழந்தை உள்ளது.
 
இதனிடையே தொழிலுக்கு தேவை எனக்கூறி மேலும் ரூ.1 லட்சம் மதிப்பிலான நகைகளை  வாங்கிகொண்ட மாருதி ராஜா, கூடுதலாக வரதட்சணை கேட்டு  மனைவியை சாப்பாடு கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்தினாராம். பின்னர் பேயன்விளைக்கு அழைத்து சென்ற மாருதிராஜா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் பிரபாவிடம் மேலும் ரூ.5 லட்சம் கேட்டு சித்ரவதை செய்துள்ளனர். புகாரின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, பிரபாவின் கணவர் மாருதி ராஜா, மாமனார்  துரைசாமி, கணவரின் சகோதரர் சிவசுப்பிரமணியன், அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரிகள் பொன்செல்வி, கவிதா, பொன்லெட்சுமி, ஆஞ்சனாதேவி ஆகிய 8 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை  நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Nalam Pasumaiyagam

Anbu Communications


Joseph Marketing


Black Forest Cakes

New Shape Tailors



Thoothukudi Business Directory