» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 4வது ரயில்வே கேட் திடீர் மூடல்: வாகன நெருக்கடியால் மக்கள் அவதி!!

செவ்வாய் 23, ஜனவரி 2018 10:45:02 AM (IST)தூத்துக்குடியில் 4வது ரயில்வே கேட் திடீரென மூடப்பட்டதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். 

தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ரயில்வே தண்டவாளத்தை கடப்பதற்காக மீளவிட்டானில் இருந்து தூத்துக்குடி கீழூர் ரயில் நிலையம் வரை 4 ரயில்வே கேட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 4வது ரயில்வே கேட் இன்று காலை முன்னறிவிப்பின்றி மூடப்பட்டது. இதுகுறித்து விசாரித்தபோது தண்டவாளத்தின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம், மற்றும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து வந்த பஸ்கள் 4வது கேட் வரை வந்து, பின்னர் பண்டுகரை சாலை வழியாக திரும்பிச் சென்றன. 

இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு  வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இன்று காலை அலுவலகத்திற்கு செல்வோர், பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வோ்ர் மிகவும் பாதிக்கப்பட்டனர். ரயில்வே அதிகாரிகள் பராமரிப்பு பணி தொடர்பாக அறிவிப்பு எதுவும் வெளியிடாமல், அங்கு ஏ4 சைஸ் பேப்பரில் பாரமரிப்பு பணி என்று நோட்டீஸ் மட்டும் ஒட்டியுள்ளனர். இது வாகன ஓட்டிகளை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது. முறையான அறிவிப்பு வெளியிட்டிருந்திருந்தால் அலைச்சலை தவிர்த்திருக்கலாமே என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 


மக்கள் கருத்து

PalaniJan 25, 2018 - 12:07:34 PM | Posted IP 122.1*****

அறிவிப்பு இல்லாத ஏற்பாடு ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticalsJohnson's Engineers
Thoothukudi Business Directory