» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்டோ டிரைவரை தற்கொலைக்கு தூண்டிய 3பேர் கைது

செவ்வாய் 23, ஜனவரி 2018 10:29:17 AM (IST)

நாசரேத்தில் ஆட்டோ டிரைவரை தற்கொலைக்கு தூண்டியதாக 3பேரை போலீசார் கைது செய்து சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 
         
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகிலுள்ள வெள்ளமடம் கிராமம், முத்துநகரைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவர் நாசரேத் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது மகன் சாமுவேல் நாசரேத்தைச் சேர்ந்த வில்சன், ஜெசுரத்தினராஜ், பால்குளத்தைச் சேர்ந்த வீரக்குமார் ஆகியோரிடம் ரூ.20 ஆயிரம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்த பணத்தை அவர் கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதற்கிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் சாமுவேல் விபத்தில் இறந்து விட்டார். சாமுவேல் வாங்கியிருந்த பணத்தை அவரது தந்தை சின்னத்துரையிடம் கேட்டு வில்சன் உள்ளிட்ட 3பேரும், தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதில் மனஉளைச்சல் அடைந்த சின்னத்துரை நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சின்னத்துரை மகன் ரமேஷ் நாசரேத் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் நாசரேத்தைச் சேர்ந்த வில்சன், ஜெசு ரத்தினராஜ், வீரக்குமார் ஆகிய 3 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிந்து கைது செய்தார். இதுகுறித்து ஆய்வாளர் ரேனியஸ் ஜெசுபாதம் விசாரணை நடத்தி சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அவர்கள் மூவரையும் 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இச்சம்பவம் நாசரேத் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Thoothukudi Business Directory