» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆதரவற்ற பெற்றோர்களை தேடி ஒரு புதிய பயணம்

புதன் 17, ஜனவரி 2018 9:01:10 PM (IST)வள்ளியூரில் பெற்ற பிள்ளைகள் கைவிட்டு ஆதரவின்றி இருக்கும் பெற்றோரை தேடிச்சென்று குழு ஒன்று உணவு, மருத்துவ வசதி செய்து தருகிறது.

திருநெல்வேலிக்கும் நாகர்கோவிலுக்கும் இடையில் உள்ளது வள்ளியூர். இங்கு இன்று முதல் (ஜனவரி 17 ம் தேதி) 15 பேர் கொண்ட குழு ஒன்று பெற்றோரை தேடி என்ற கருத்தை அடிப்படையாக கொண்டு பெற்ற பிள்ளைகளே கைவிட்டு ஆதரவின்றி இருக்கும் பெற்றோரை தேடிச்சென்று உணவு, மருத்துவ வசதி செய்து தருகிறது. இது குறித்து அக்குழுவின் தலைவர் பங்கு தந்தை ஜெரால்டு ரவி நமது செய்தியாளரிடம் கூறியதாவது, நாங்கள் பிள்ளைகள் இருந்தும் கவனிப்பாரின்றி இருக்கும் பெற்றோர், மகன், மகள் கைவிட்ட ஆதரவற்ற வயதான பெற்றோர்கள், வயது முதிர்வால் வேலைகள் செய்ய முடியாமல் இருக்கும் முதியவர்கள் ஆகியோர்க்கு மதியம், இரவு என இருவேளை தவறாமல் உணவளிக்கும் சேவையை இன்று முதல் தொடங்கியுள்ளாேம்.

இதில் மதியம் சாதம், சாம்பார், கூட்டு அடங்கிய சாப்பாடும் இரவு இட்லி, சப்பாத்தி ஆகியவற்றை அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று தருகிறோம். மதியம் 1 மணிக்குள், இரவு 7 மணிக்குள் உணவை கட்டாயம் வழங்கி விடுவோம். மேலும் 10 நாட்களுக்கு ஒருமுறை பெரியவர்களை பரிசோதித்து அவர்களின் உடல்நிலை எப்படி இருக்கிறது.? மருத்துவ உதவி தேவையா என பரிசோதிக்கப்படும். மேலும் அவர்களுக்கு உதவி தேவைப்பட்டால் எங்களின் போன் நம்பரையும் அளித்துள்ளோம் என்றார்.

பெற்றோரை தேடி குழுவில் மொத்தம் ஆசிரியர், டாக்டர்கள், வழக்கறிஞர் என 15 பேர் வரை உள்ளோம். சாதி, மத பேதமின்றி அனைவருக்கும் உதவுவதே எங்கள் நோக்கம். இதற்கான நிதியை உள்ளூரிலேயே திரட்டி அவர்களையும் இப்பணியில் ஈடுபடுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் வசதியுள்ளோர், உதவி செய்ய மனமுள்ளோர் தங்கள் வீட்டு விசேஷங்களை முன்னிட்டு ஆதரவற்றோர்களுக்கு எங்கள் மூலம் உதவ நினைத்தால் மதிய சாப்பாட்டிற்கு ரூ,3000 இரவு சாப்பாட்டிற்கு ரூ.2500 ம் அளிக்கலாம்.

இதற்கிடையே எங்கள் முயற்சியை பார்த்து மேலும் பலர் எங்கள் முயற்சிக்கு தங்களால் இயன்ற நிதியை பிப்ரவரி மாதம் வரை அளித்துவிட்டனர். மேலும் வேட்டி, சேலை வழங்குவதாக ஒருவர் தெரிவித்துள்ளார். மொத்தத்தில் பெற்ற மகன் அல்லது மகள் தங்கள் பெற்றோரை எப்படி கவனித்து கொள்வார்களோ அவ்வாறே நாங்கள் ஆதரவற்ற பெற்றோர்களை கவனித்து கொள்வோம் என்றார். இவர்களது புதிய முயற்சிக்கு அனைவரும் பாராட்டுகளை தொிவித்த வண்ணம் உள்ளனர்.


மக்கள் கருத்து

நீதிமொழிகள்Jan 18, 2018 - 01:52:36 PM | Posted IP 117.2*****

நன்மை செய்யும்படி உனக்குத் திராணி இருக்கும் போது, அதை செய்யத்தக்கவர்களுக்கு செய்யாமல் இராதே.

மக்கள்Jan 18, 2018 - 01:19:37 PM | Posted IP 61.2.*****

நல்ல முயற்சி வாழ்த்துக்கள். அனால் சாதி சமய வேறுபாடின்றி என்று அன்புத்தந்தை ஜெரால்டு ரவி சொல்லுவது வேடிக்கையாகவுள்ளது . திருச்சபையில் சாதி சண்டையை உருவாக்கியதே இந்த அன்பு தந்தை தான்.........

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Black Forest Cakes


Nalam Pasumaiyagam

Joseph MarketingCSC Computer Education

Anbu CommunicationsThoothukudi Business Directory