» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வஉசி துறைமுகத்தில் விரைவில் புதிய கப்பல் தளம் : ஒப்பந்தம் கையெழுத்தானது

புதன் 17, ஜனவரி 2018 6:20:20 PM (IST)
வ.உ. சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக்கழகம் பொது தனியார் கூட்டமைப்பின் அடிப்படையில் கட்டுமான மூலப்பொருட்கள் கையாளு வதற்கான குறைந்த மிதவை ஆழம் கொண்ட கப்பல் தளம் கட்டுவதற்கான சலுகை ஒப்பந்தம்  இன்று (ஜனவரி 17 ம் தேதி) கையெழுத்திடப்பட்டது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகம் சார்பாக இந்திய இரயில் போக்குவரத்து பணி ஜெயகுமார், தலைவர் வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகம் மற்றும் M/s VJR துறைமுக முனையம் பிரைவேட் லிமிடெட், தூத்துக்குடி சார்பாக ஜெகதீஸ்சன், இயக்குநர், M/s VJR துறைமுக முனையம் பிரைவேட் லிமிடெட், தூத்துக்குடி சலுகை ஒப்பந்த்தில் கையெழுத்திட்டனர். சுரேஷ் எஸ்.பி. பாட்டில், தலைமை பொறியாளர், வ.உ. சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகம் மற்றும் ஞானராஜ், M/s VJR துறைமுக முனையம் பிரைவேட் லிமிடெட், தூத்துக்குடி ஆகியோர் உடன் இருந்தினர்.

பொது தனியார் கூட்டமைப்பின் அடிப்படையில் கட்டுமான மூலப் பொருட்கள் கையாளுவதற்கான குறைந்த மிதவை ஆழம் கொண்ட கப்பல்தளம் ரூ 65.37 கோடி திட்ட மதிப்பீட்டில் M/s இந்திய துறைமுக முனையம் பிரைவேட் லிமிடெட், தூத்துக்குடி நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட உள்ளது. M/s இந்திய துறைமுக முனையம் பிரைவேட் லிமிடெட், தூத்துக்குடி நிறுவனமானது தனது வருவாய் பங்கில் 36.01 சதவீதம் துறைமுகத்திற்கு வழங்க உள்ளது. இக்கப்பல்தளத்தின் கட்டுமானம் மற்றும் இயக்கத்தினை செயல்படுத்துவதற்கு M/s இந்திய துறைமுக முனையம் பிரைவேட் லிமிடெட், தூத்துக்குடி, M/s ஏதுசு துறைமுக முனையம் பிரைவேட் லிமிடெட் என்ற சிறப்பு நிறுவனத்தினை (SPV) அமைத்துள்ளது. சலுகை ஒப்பந்தம் கையெழுத்திட நாள் முதல் 3 மாதத்திற்குள் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு, 18வது மாதத்தில் வர்த்தக செயல்பாடுகள் துவங்கப்படும். 

இக்கப்பல்தளத்தின் கொள்ளளவு ஆண்டிற்கு சுமார் 2 மில்லியன் ஆகும். இத்தளம் 260 மீட்டர் நீளம் மற்றும் 30மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கும். சரக்குகளை கையாளுவதற்கும் சேமித்து வைப்பதற்கும் 2.5 ஹெக்டார் நில பரப்பினை துறைமுகம் வழங்கியுள்ளது. மேலும் 10.3 மீட்டர் மிதவை ஆழம் கொண்டுள்ள இக்கப்பல்தளத்தில் 25,000 DWT கொள்ளளவு கொண்ட கப்பல்களை கையாள முடியும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals

New Shape Tailors

Joseph Marketing
Thoothukudi Business Directory