» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் சாலையில் நாற்று நடும் போராட்டம்

புதன் 17, ஜனவரி 2018 2:22:50 PM (IST)கோவில்பட்டி அருகே சாலை மற்றும் வாறுகால் ஆகியவற்றை சீர் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் நாற்று நாடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மந்திதோப்பு ஊராட்சிக்குட்பட்ட பகுதி கணேஸ்நகர். இந்த பகுதியில் 600க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள சாலைகள் அனைத்து முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் போதிய வாறுகால் வசதி இல்லாத காரணத்தினாலும், இருக்கின்ற வாறுகால்கள் பாரமரிப்பு செய்யப்படாத காரணத்தினால் சாலைகள் முழுவதும் சாக்கடை நீர் தேங்கி இருப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்கள் டெங்கு காய்ச்சல், வாந்தி, பேதி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் நிலை உள்ளதால் இவற்றை சீரமைக்க கோரி பலமுறை மனு அளித்தும எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

சாலை மற்றும் வாறுகால் ஆகியவற்றை சீர் செய்யவேண்டும், டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சேதமடைந்த, சாக்கடை நீர் தேங்கி இருக்கும் சாலையில் மல்லி, தக்காளி செடி நாற்றுக்களை நட்டி, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், நகர செயலாளர் பரமராஜ், தாலூகா செயலாளர் பாபு, தாலூகா குழு உதவி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சுரேஸ், மந்திதாப்பு கிளை உறுப்பினர்கள் செண்பகராஜ்,மாரியப்பன், தாலூகா பொருளாளர் முப்பிடாதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailorscrescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph MarketingThoothukudi Business Directory