» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆழ்வாரில் வைரமுத்துவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஞாயிறு 14, ஜனவரி 2018 10:47:38 AM (IST)ஆண்டாள் குறித்து அவதூறாக கருத்து வெளியிட்ட கவிஞர் வைரமுத்துவை கண்டித்து ஆழ்வார்திருநகரியில் ஜீயர் சுவாமிகள் தலைமையில் கண்டன பேரணி நடந்தது.

ஆழ்வார்திருநகரியில் கவிஞர் வைரமுத்துவை கண்டித்து மாபெரும் கண்டன பேரணி நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.ஆண்டாள் பற்றி தவறான கருத்துக்களை கவிஞர் வைரமுத்து பேசியதாகவும், அதனை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்தி ருநகரியில் கண்டனம் தெரிவித்து 70க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கண்டன பேரணி நடந்தது. 

இந்த கண்டன பேரணியை ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் துவக்கி வைத்தார். பேரணியில் வைரமுத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்ப ட்டது. பேரணி ஆழ்வார்திருநகரி வடக்குமாடவீதி, தெற்குமாடவீதி, தேரடி வீதி சுற்றி ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் நம்மாழ்வார் கோவில் முன்பு நிறைவடைந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTDNew Shape Tailorscrescentopticals

Joseph Marketing
Thoothukudi Business Directory