» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் சமுதாய வளர்ச்சிதுறை சார்பில் சமுதாய பொங்கல் விழா

சனி 13, ஜனவரி 2018 10:20:49 PM (IST)ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் சமுதாய வளர்ச்சி துறை திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், திட்ட இணைந்து சமுதாய சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார்கள்.

தாமிர உற்பத்தியில் முன்னனி நிறுவனமாக விளங்கி வரும் ஸ்டெர்லைட் நிறுவனம் மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, மகளிர் தொழில் மேம்பாடு, இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்தல், பெண் கல்வி ஊக்குவிப்பு, உள்ளிட்ட சமுதாய வளர்ச்சி பணிகளை அரசு சாரா நிறுவனங்களோடு இணைந்து செயல்படுத்தி வருகிறது. தூத்துக்குடி மற்றும் சுற்றுபுர பகுதியில் பலதிட்டங்களை செயல்படுத்திவரும் இந்நிறுவனம் தனது சமுதாய வளர்ச்சி திட்ட பங்காளர்களோடு ஜாதி, மத பேதமின்றி சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடியது. 

தூத்துக்குடி தாளமுத்துநகர் ஆர்.சி.உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவிற்க்கு தாளமுத்துநகர் ஆலய பங்கு தந்தை அருட்திரு. இருதயராஜ் தலைமை தாங்கினார். ஸ்டெர்லைட் சமுதாய வளர்ச்சி துறை தலைவர் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர். கைலாசம், சமுதாய வளர்ச்சி பிரிவு மேலாளர் சுகந்தி செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி வளாகத்தில் கலர் கோலமிட்டு முக்கல்லை அடுக்கி வைத்து பனைஓலையால் தீ மூட்டி புத்தரிசியில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். பானையில் இட்ட புத்தரிசி பொங்கிவரும் கூடியிருந்தவர்கள் ஜாதி,மத பேதமின்றி பொங்கலோ,பொங்கல் என மகிழ்ச்சி பொங்க சத்தமிட்டனர். ஸ்டெர்லைட் இளம் மொட்டுகள் திட்ட இயக்குநர் சஞ்சீவ், தாமிர முத்துக்கள் திட்ட ஒருங்கிணைப்பாளர் சார்லஸ், குழந்தைகள் மையமான குஷி திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலெட்சுமி, மகளீர் மேம்பாட்டு திட்டமான ஷகி திட்ட பங்கேற்பாளர்களான பெல் சொசைட்டி இயக்குநர் ஜேசுதாசன், துளசி சோசியல் டிரஸ்ட் இயக்குநர் தனலெட்சுமி,  தாயகம் டிரஸ்ட் இயக்குநர் ஜெயகனி, மற்றும் அந்தந்த நிறுவன களப்பணியாளர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTDcrescentopticals

Joseph Marketing

New Shape TailorsThoothukudi Business Directory