» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

களை கட்டிய ஆட்டுச்சந்தை: ரூ.6 கோடி வரை விற்பனை ... மக்கள் கூட்டம் அலைமோதல் - வியாபாரிகள் மகிழ்ச்சி!!

சனி 13, ஜனவரி 2018 4:40:16 PM (IST)எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் பொங்கல் விற்பனை களைகட்டியது. ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனையாகி உள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரம் சந்தை தான். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நடைபெறும் எட்டயபுரம் ஆட்டுச்சந்தைக்கு தூத்துக்குடி, நெல்லை, மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆட்டுவியாபாரிகள் வந்து இங்கு ஆடுகளை வாங்கி செல்வது வழக்கம். கோவில்பட்டி, விளாத்திகுளம், கயத்தார், கடம்பூர், கழுகுமலை, புதூர் பகுதியில் பெரும்பாலான மக்கள் ஆடு வளர்ப்பதை முக்கிய தொழிலாளாக செய்து வருகின்றனர். 

மேலும் இந்த பகுதியில் விவசாயம் அதிகம் என்பதால் இயற்கையாகவே கால்நடை வளர்ப்பு தொழில் நடைபெற்றது வருகிறது. பெரும்பாலும் இந்த பகுதியில் விவசாயிகள் தான் ஆடுகளை வளர்த்து வருவதால் வியாபாரிகள் எதிர்ப்பார்த்த அளவிற்கு ஆடுகள் இருக்கும் என்பதால் எட்டயபுரம் ஆட்டு சந்தையை நோக்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பண்டிகை காலங்களில் சரசரியாக 3 முதல் 5 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். அதிலும் குறிப்பாக பொங்கல் பண்டிகையின் போது ஆடுகள் விற்பனை அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டு வறட்சி மற்றும் பணமதிப்பு இழப்பு காரணமாக பொங்கல் பண்டிகை ஆடு விற்பனை மந்தமாக இருந்தது. 

ஆனால் இந்தாண்டு ஓரளவு மழை பெய்து விவசாயம் நடைபெற்ற காரணத்தினால் ஆடுகளில் வரத்து சந்தைக்கு அதிகமாக காணப்பட்டது. சுமார் 5ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரபட்டன. 10கிலோ எடை கொண்ட ஆடு ரூ 6 முதல் 6.500 வரை விற்பனை செய்யப்பட்டது. நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதால் இன்றைக்கு ஆட்டுச்சந்தையில் ஆட்டு வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது மட்டுமின்றி, ஆர்வமுடன் ஆடுகளை வாங்கி சென்றனர். கடந்த ஆண்டு வியாபாரம் 3 கோடி ரூபாய் இருந்த நிலையில் இந்தாண்டு சுமார் 6 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றுள்ளதால் ஆடு வளர்ப்போர், ஆட்டுவியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Adscrescentopticals

New Shape TailorsFriends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing
Thoothukudi Business Directory