» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஒக்கி புயல் பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ. 66.68 இலட்சம் நிவாரணம் - ஆட்சியர் தகவல்

சனி 13, ஜனவரி 2018 3:20:16 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட 1,150 விவசாயிகளுக்கு ரூ. 66.68 இலட்சம் நிவாரணம் வழங்கப்பட உள்ளது.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஓக்கிபுயலால் பாதிக்கப்பட்ட வாழை பயிர்களுக்கான நிவாரணம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ஹெக்டேருக்கு ரூபாய் 13,500/- வழங்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒக்கிபுயலால் பாதிப்படைந்த திருச்செந்தூர் தாலுகாவில் சேர்ந்தமங்கலம், சேதுக்குவாய்த்தான், மேல ஆத்தூர், ஆத்தூர், அங்கமங்கலம், சுகந்தலை, நல்லூர், புரையூர், நாலுமாவடி, ராஜபதி, அம்மன்புரம், கானம், வீரமாணிக்கம், மேலதிருச்செந்தூர், கீழதிருச்செந்தூர் மற்றும் மூலக்கரை கிராமங்களில் 873 விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் முக்காணி, கொற்கை, கொட்டாரங்குறிச்சி, வாழவல்லான், கொடுங்கனி, கீழ்ப்பிடாகை அப்பன்கோவில், வல்லநாடு மற்றும் தோழப்பன்பண்னை, முறப்பநாடு, நானல்காடு, மணக்கரை, கொங்காரயக்குறிச்சி மற்றும் ஆறாம்பண்னை ஆகிய கிராமங்களில் 166 விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. 

சாத்தான்குளம் தாலுகாவில் அரசூர்-1, அரசூர்-2, நடுவக்குறிச்சி, கொம்மடிக்கோட்டை, திருப்பணி புத்தன்தருவை, சாஸ்தாவிநல்லூர் மற்றும் பள்ளக்குறிச்சி ஆகிய கிராமங்களில் 111 விவசாயிகளுக்கும், மொத்தத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 1,150 விவசாயிகளுக்கு ரூ. 66.68 இலட்சம் வழங்கப்பட உள்ளது. இத்தொகை சம்பந்தப்பட்டவிவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக மின்னனு பரிவர்த்தனை மூலம் வரவு வைக்கப்படும்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph MarketingNew Shape Tailors

crescentopticals
Thoothukudi Business Directory