» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இந்து முன்னணி கம்பம் விவகாரம் 10 பேர் மீது வழக்கு: நாசேரத் பகுதியில் பரபரப்பு

சனி 13, ஜனவரி 2018 10:53:38 AM (IST)நாசரேத்தில் இந்து முன்னணி கொடிக்கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில் இருதரப்பைச் சேர்ந்த 10பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் காமராஜர் பேருந்து நிலையம் நுழைவுவாயில் அருகே நேற்று அதிகாலை 3 மணியளவில் இந்து முன்னணியி கொடிக்கம்பம் புதிதாக அமைத்துள்ளனர். ஆனால், அந்த கொடிக்கம்பம் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டதாகக் கூறி நாசரேத்தைச் சேர்ந்த ராஜேஷ், மாணிக்கம், செல்வக்குமார், சாமுவேல், ராஜ், ஜெயபால், குட்டி ஆகியோர்  அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் இரண்டு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து நாசரேத் கிராம நிர்வாக அதிகாரி தேசிகன் புகாரின்பேரில் அனுமதியில்லாமல் கொடிக்கம்பம் வைத்ததாக நாசரேத் நகர இந்து முன்னணி தலைவர் வெட்டும்பெருமாள் உள்பட 5 பேர் மீதும், இந்து முன்னணி கொடிக்கம்பத்தை அகற்றியதாக ராஜேஷ், மாணிக்கம், செல்வக்குமார், சாமுவேல், ராஜ், ஜெயபால், குட்டி ஆகியோர் மீதும் நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இரண்டு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்படாமல் இருக்க நாசரேத் போலீசார்,ஆய்வாளர் ரேனியஸ்ஜேசுபாதம் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன்,மணி உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாசரேத் பகுதியில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

உண்மைJan 16, 2018 - 01:41:35 PM | Posted IP 122.1*****

இனிமேலும் இந்துக்கள் உண்மை உணராமல் இருந்தால் தாய்நாட்டில் அகதிகளாய் மாற வேண்டிய சூழல் உருவாகும்!

நிஹாJan 16, 2018 - 12:27:11 PM | Posted IP 117.2*****

தமிழனின் கருத்து மிக சரியானது.

INDIANJan 13, 2018 - 02:49:18 PM | Posted IP 61.3.*****

மதம் சாராத இந்திய நாட்டை கெடுக்கும் மதவாத மத்திய அரசு அகட்ட படவேண்டும்

balaJan 13, 2018 - 12:02:23 PM | Posted IP 59.89*****

இந்துக்களை தீவிரவாதி ஆக்காதீர்கள்!

பாலாJan 13, 2018 - 11:59:01 AM | Posted IP 59.89*****

என்ன எது கிறிஸ்டியானத்துவவா!

தமிழன்Jan 13, 2018 - 11:09:43 AM | Posted IP 157.5*****

முறையான அனுமதி பெறவில்லை என்றால் காவல்துறையினருக்கு மட்டுமே கொடிக்கம்பத்தை அகற்ற உரிமை உள்ளது. நீங்கள் நேர்மையானவர்களாக இருந்தால் காவல்துறையினரிடம் புகார் அளித்திருக்க வேண்டும். மாறாக, தன்னிச்சையாக இவர்களே கொடி கம்பத்தை அகற்ற யார் இவர்கள்? யார் இவர்களுக்கு இந்த உரிமையை கொடுத்தனர்?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Universal Tiles Bazar

selvam aqua


Johnson's Engineers

New Shape TailorsThoothukudi Business Directory