» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாதபாத்திரை பக்தர்களால் களைகட்டிய திருச்செந்துார்

வெள்ளி 12, ஜனவரி 2018 7:10:13 PM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தை மாத பிறப்பை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவச பாடல்களுடன் காவடி எடுத்தும் அலகு குத்தியும் பாத யாத்திரையாக குவிந்து வருகின்றனர். இதனால் கோயில் வளாகம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. இதனால் விவசாயிகள் உழவு தொழிலை நேசிக்கும் விதமாக தை மாத பிறப்பு தினத்தில் உழவு பொருட்களை வழிப்பட்டு பொங்கலிட்டு வழிப்படுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த விவசாயிகள் தமிழ் கடவுள் முருகப்பெருமானை வழிப்பட்டு அன்றைய தினத்தில் பொங்கலிட்டு வழிப்படுகின்றனர். இதனால் தை மாத பிறப்பு மற்றும் பொங்கல் பண்டிகையையட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முருகபக்தர்கள் திருச்செந்தூருக்கு மாலை அணித்து விரதம் இருந்து வந்தனர். 

இந்த பக்தர்கள் திருச்செந்தூர் கோயிலுக்கு பாத யாத்திரையாக குவிந்து வருகின்றனர். திருநெல்வேலி, தூத்துக்குடி மார்க்க ரோடுகளில் வழிநெடுக பச்சை நிற ஆடையணித்த முருகபக்தர்கள் சந்தணம், விபூதி பூசி காவடி எடுத்தும், நீண்ட வேல்களால் அலகு குத்தியும் பாத யாத்திரையாக குவிந்து வருகின்றனர். திருச்செந்தூர் வரும் ரோட்டில் குமாரபுரத்தில் நுழைவுவாயில், தூத்துக்குடி மார்க்கமாக வரும் பக்தர்கள் பிரசாத்நகரில் உள்ள விநாயகரை வழிப்பட்டு கோயிலுக்கு வருகின்றனர். இந்த பக்தர்கள் முருக பக்தி பாடல்களை ஆடி பாடி வருவது கண்கொள்ளாகாட்சியாக உள்ளது.

தை மாத பிறப்பு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 7.15 மணிக்கு காலசந்திபூஜை, பகல் 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், அதனை தொடர்ந்து உச்சிகால தீபாராதனை மற்றும் மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடக்கிறது.

பாத யாத்திரை பக்தர்கள் பல்லாயிரக்கணக்கான குவிந்து வருவதால் திருச்செந்தூர் கோயில் வளாகம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த பக்தர்கள் வரிசை முறையில் சுவாமி தரிசனம் செய்ய பிரத்யோக வரிசை முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணி கண்டன் மற்றும் இணை ஆணையர் பாரதி ஆகியோர் செய்துள்ளனர். 


மக்கள் கருத்து

சங்கர்Jan 13, 2018 - 10:12:25 AM | Posted IP 61.2.*****

திருச்செந்திலாண்டவருக்கு அரோகரா அரோகரா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing






Thoothukudi Business Directory