» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இந்து முன்னணி கொடிக்கம்பம் உடைப்பு : போலீஸ் குவிப்பு - நாசரேத்தில் பதற்றம்

வெள்ளி 12, ஜனவரி 2018 5:49:41 PM (IST)



நாசரேத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் இந்து முன்னணி கொடிக்கம்பம் சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் இன்று காலை பேருந்து நிலையம் அருகே உள்ள இந்து முன்னணி கொடிக்கம்பத்தில் விவேகானந்தர் படத்தினை வைத்து, நிர்வாகிகள் அருணாசலம் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். அப்போது அங்கு வந்த கிறிஸ்தவர்கள் சிலர் இந்த பகுதியில் இதுபோன்ற விழாக்களை கொண்டாட கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிலர் அருணாசலத்தை தாக்கியதோடு, இந்து முன்னணி கொடி கம்பத்தை அடித்து உடைத்துள்ளனர். இதையடுத்து இந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மத மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவியதால், தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் அதிடிப்படை வாகனமும், வஜ்ரா வாகனமும் அங்கு வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 



மக்கள் கருத்து

தமிழன்Jan 12, 2018 - 10:55:51 PM | Posted IP 157.5*****

என்ன கொடுமை இது ... விவேகானந்தர் ஜெயந்தி கொண்டாடக்கூட எதிர்ப்பா? காவல்துறையினர் நேர்மையாக எதிர்ப்புத்தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கைஎடுக்கவேண்டும்.

செந்தில் குமார்Jan 12, 2018 - 07:10:50 PM | Posted IP 117.2*****

இது ஹிந்து நாடு ஹிந்து ப்ரோக்ராமம் நடத்த முடியல ஹிந்துக்களே சிந்திப்பீர் மதம் மாறாது இருப்பீர்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Joseph Marketing

crescentopticals


New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD





Thoothukudi Business Directory