» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் களைகட்டுகிறது பொங்கல் விற்பனை

வெள்ளி 12, ஜனவரி 2018 4:05:10 PM (IST)



தூத்துக்குடியில் பொங்கல் விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது. மார்க்கெட் வீதிகளில் மக்கள் குவிந்து வருகின்றனர். 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (14ம்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த தூத்துக்குடி காய்கறி விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது. மார்க்கெட்டில் கத்திரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், தக்காளி, மிளகாய், பட்டர் பீன்ஸ், வெங்காயம், தடியங்காய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சிறுகிழங்கு, உள்ளிட்ட காய்களின் விலை குறைந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், பனங்கிழங்கும், பச்சரிசி, சம்பா அரிசி, வெல்லம் போன்றவைகளும் விற்பனையும் அதிகரித்துள்ளது. 

பூ மார்க்கெட்டிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. தற்போது வீசிய ஒக்கி புயல் காரணமாக வாழைகள் சாய்ந்ததால் வாழைத்தார், வாழை இலை, வாழைக்காய்கள் வரத்து குறைந்துள்ளது. மேலும், அதன் விலையும் அதிகரித்துள்ளது. மஞ்சள்குலை, கரும்பு, பனங்கிழங்கு உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான பொருட்களின் விற்பனை சற்று மந்தமாகவே உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். எனினும் நாளை விற்பனை அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பஸ் ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்துள்ளதால் சுற்றுவட்டார கிராம மக்கள் தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு வரத்தொடங்கியுள்ளனர்.



பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல்படி கொடுப்பதற்காக லாரி, வேன், ஆட்டோக்களில் கரும்பு, அரிசி, வெண்கல பாத்திரங்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. ஜிஎஸ்டி வரி காரணமாக பித்தளை பானை, குடம் போன்ற பொருட்களின் விலை அதிரித்துள்ளது. தூத்துக்குடி காமராஜர் மார்க்கெட், வஉசி மார்க்கெட், புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம், டபிள்யூ ஜி சி ரோடு, பாளை ரோடு, பாலவிநாயகர் கோயில் தெரு, ரயில்நிலையம் போன்ற நகரின் முக்கிய பகுதிககளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. சில இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD




Joseph Marketing





Thoothukudi Business Directory