» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஜாமினில் வந்த வாலிபர் கழுத்தறுத்து கொடூர கொலை : எட்டயபுரம் அருகே பயங்கரம்

வெள்ளி 12, ஜனவரி 2018 3:58:28 PM (IST)

எட்டயபுரம் அருகே ஜாமினில் வந்த வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள மாசார்பட்டி கிராமத்தில் உள்ள குளத்தின் கரையில் இன்று காலை வாலிபர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டும், உடலில் பல இடங்களில் கத்திக்குத்து, வெட்டுக் காயங்களுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து மாசார்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் தாப்பாத்தி கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் முகேஷ் (27) என்பது தெரியவந்தது.

இவர் மீது மாசார்பாட்டி காவல் நிலையத்தில் 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக 2 வழக்குகளும், அடிதடி வழக்குகளும் உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஜாமீனில் வந்துள்ளார். இதனால் முன் விரோத்தில் இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. மேலும், அவரது உடலில் 28 இடங்களில் கத்திக்குத்து, அரிவாள் வெட்டு காயங்கள் இருந்தது. இதனால் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக மாசார்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்வம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

இரத்தம்Jan 12, 2018 - 04:00:52 PM | Posted IP 89.21*****

சபாஷ் சரியான தண்டனை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors




Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals




Thoothukudi Business Directory