» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இளம்பெண்ணிடம் செல்போன் பறிப்பு: வாலிபரை மடக்கிபிடித்து பொதுமக்கள் தர்ம அடி

வெள்ளி 12, ஜனவரி 2018 11:31:43 AM (IST)



தூத்துக்குடியில் இளம்பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து வந்த இளம்பெண் ஒருவர் இன்று காலை பாலவிநாயகர் கோவில் தெருவில், நடந்து வந்து கொண்டிருந்தார். அவர் தனது செல்போனில் பேசியவாரே நடந்து வந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர், திடீரென அந்த பெண்ணிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஓட்டம்பிடித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் திருடன் திருடன் என்று கூச்சலிட்டவாறு, பின்தொடர்ந்து விரட்டிச் சென்றார். 

இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் திரண்டு வந்து அந்த வாலிபரை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து, அவரிடம் இருந்த செல்போனை மீட்டனர். பின்னர், "தான் கல்லூரி மாணவன் என்றும், இனிமேல் இதுபோல் செய்யமாட்டேன் என்று மன்னிப்பு கோரியதால் பொதுமக்கள் அந்த வாலிபரை மன்னித்து விட்டனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பெண்ணிடம் செல்போன் பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுபோல் விழாக்காலங்களில், பேருந்து நிலையம் போன்ற மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் பகுதிகளில் சிறுவர்கள், மாணவர்கள் சிலர் செல்போன் பறிப்பில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. மேலும், இதுபோன்ற சீசன் திருடர்களை கட்டுப்படுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 


மக்கள் கருத்து

உண்மைJan 16, 2018 - 01:17:31 PM | Posted IP 122.1*****

திருடனின் பெயர் கூற வில்லை! போலீசில் ஒப்படைக்க வில்லை ஏன்? அவன் சிறுபான்மையினம் என்பதாலா?

vadivelJan 13, 2018 - 12:30:41 PM | Posted IP 106.2*****

ஹெல்மட் அணியாமல் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing


crescentopticals




Thoothukudi Business Directory