» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

2ஜி தீர்ப்பினால் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது : கோவில்பட்டியில் டி.டி.வி.தினகரன் பேட்டி

வெள்ளி 22, டிசம்பர் 2017 10:29:53 PM (IST)

2ஜி வழக்கு தீர்ப்பினால் தமிழகத்தில் எவ்வித அரசியல் மாற்றமும் ஏற்பட போவது இல்லை என டி.டி.வி.தினகரன் கூறினார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டி சொந்த ஊரான மூவிருந்தாளி சாலைப்புதூருக்கு அவரது வீட்டிற்கு ஆறுதல் கூறுவதற்காக டி.டி.வி தினகரன் செல்லும் வழியில் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெறுவேன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்தில் இருந்து கட்சியின் பொதுச்செயலாளருக்கு சம்மன் அனுப்பியது குறித்து எதுவும் தெரியாது என்றார். 

தமிழகத்தில் ஆளுநர் செயல்பாடு தவறானது என்றும், 2ஜி வழக்கு தீர்ப்பினால் தமிழகத்தில் எவ்வித அரசியல் மாற்றம் நிகழப்போவது கிடையாது; மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று சிலர் கூறி வருகின்றனர். அது பொய்யான செய்தி, ஊடகங்கள் தான் அதனை பெரிது படுத்தி வருவதாகவும், ஜெயலலிதாவின் மகள் குறித்து பன்னீர் செல்வத்திற்கு தெரியும் என்பது வேடிக்கையான செய்து, அவருக்கு ஜெயலலிதாவை 2001ல் தான் தெரியும், 87ல் வெண்ணிறைடை நிர்மலாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தவர் பன்னீர்செல்வம், தமிழக காவல்துறையினரும், உளவுத்துறையினரும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்களை கண்காணிப்பது மட்டுமே வேலையாக வைத்திருந்தனர். 

ராஜஸ்தானுக்கு ஒரு திருட்டு கும்பலை பிடிக்க போக வெறும் 4காவலர்களை அனுப்பியது தவறு, அதிகளவு காவலர்களை அனுப்பி இருக்க வேண்டும் என்று பெரியபாண்டியன் மனைவி தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு யார் வீட்டில் இழவு விழுந்தாலும் பரவா இல்லை, அவருக்கு வேண்டியது கிடைத்து போது என்று நினைக்கிறார் என்று தெரிவித்தார். பேட்டியின் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் தங்கதமிழ்செல்வன், சுந்தர்ராஜ், உமாமகேஸ்வரி, அமைப்புச் செயலாளர் மாணிக்கராஜா, ஒன்றிய செயலாளர்கள் ரூபம்.கே.வேலன், ஈஸ்வரபாண்டியன், செல்வக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.சிவபெருமாள், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் நாகராஜன், பி.வி.சீனிவாசன், செண்பகராமன், எல்.எஸ்.பாபு, கணபதிபாண்டியன், ராஜேஸ்கண்ணன், பெரியசாமி பாண்டியன், வெள்ளத்துரை, சின்னத்துரை, கருப்பசாமி, செல்லத்துரை மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals
New Shape TailorsThoothukudi Business Directory