» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு நூலகம் புரவலர் சேர்க்கையில் மாவட்டத்தில் முதலிடம்

சனி 16, டிசம்பர் 2017 8:08:38 PM (IST)வேப்பலோடை அரசு கிளை நூலகம் புரவலர் சேர்க்கையில் மாவட்டத்தில் முதல் இடம் பெற்று சாதித்துள்ளது.

வேப்பலோடையில் நடைபெற்ற நூலக விழாவிற்கு சென்னை உயர்நீதி்மன்ற வழக்கறிஞர் நெல்சன் கோயில்தாஸ் தலைமை தாங்கினார்.அன்னை தெரசா கிராம பொதுநலச்சங்கத் தலைவர் முனியசாமி,ஆசிரியர் கண்ணையா, சின்னத்துரை, ஆசிரியர் மணி,பீட்டர்,வைப்பார் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் செண்பகப்பெருமாள்,குளத்தூர முன்னாள்  ஊராட்சி மன்றத் தலைவர் சின்னச்சாமி,செல்வம்,நூலகர் சிவகுமார்,பொழிச்சலூர் வியாபாரி கள் சங்கத்தலைவர் கோமஸ் முன்னிலை வகித்தனர்.

ஆசிரியர் துரையரசு வரவேற்புரை ஆற்றினார்.ஆசிரியர்கள் ஜெபராஜ், செல்வக்குமார், சரவணன் வாழ்த்துரை வழங்கினர்.அன்னை தெரசா கிராம பொதுநலச்சங்க செயலர் ஜேம்ஸ் அமிர்தராஜ் நூலக செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாவட்ட நூலக அலுவலர் ராம்சங்கர்,வேப்பலோடை அரசு கிளை நூலகம் 373 புரவல்களை சேர்த்து மாவட்டத்தில் முதலிடம் பெற்றமைக்காக,அதற்கு காரணமான அன்னை தெரசா கிராம பொதுநலச் சங்கத்திற்கு நற்சான்று வழங்கி, சிறப்புரை ஆற்றினார்.முடிவில் சங்கப்பொருளாளர் முத்துக்கி ருஷ்ணன் நன்றியுரை வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads


New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Joseph Marketing


crescentopticals

Thoothukudi Business Directory