» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கற்குவேல் அய்யனார் கோயில் கள்ளர்வெட்டு திருவிழா : இன்று மாலை கோலாகலமாக நடக்கிறது

சனி 16, டிசம்பர் 2017 11:42:31 AM (IST)

திருச்செந்தூர் அருகே தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயில் கள்ளர்வெட்டு திருவிழா இன்று மாலை நடக்கிறது. திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே தேரிகுடியிருப்பை ஒட்டியுள்ள குதிரைமொழி கிராம வனப்பகுதியில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான கற்குவேல் அய்யனார் ஆலயம் எழிலுடன் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தைச் சுற்றிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க செம்மண் தேரிகுன்றுகள் அரண் போலவும், கோட்டைச் சுவர் போலவும் அமைந்துள்ள காட்சி கண்கொள்ளா காட்சியாகும். அய்யன் இங்கு பூரணம், பொற்கலை ஆகிய இரு தேவியருடன் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். 

அய்யன் மட்டுமல்லாது பேச்சியம்மன், சுடலைமாடன், பெரியாண்டவர், வன்னியராஜா, பொன்காத்த அய்யன் உட்பட சுமார் 61 க்கு மேற்பட்ட வன தேவதைகளும் இங்கு எழுந்தருளி அருள் வழங்குகின்றனர். அநீதிகள் தலைதூக்கிய போது அதனை அழித்து நீதியை நிலை நிறுத்தினார் அய்யன். அந்த நாளே கள்ளர்வெட்டு நாளாக கொண்டாடப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க இந்த ஆலயத்தின் கள்ளர் வெட்டுத் திருவிழா கடந்த மாதம் நவ.16ம் தேதி துவங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த நவ.17ம் தேதி ஜவராஜா-மாலையம்மன் பூஜையும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் தொடங்கியது. 

தொடர்ந்து தினமும் அய்யனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. டிச.14ம் தேதி பகல் 11 மணிக்கு ஜவராஜா-மாலையம்மன் பூஜை,  மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனை   நடைபெற்றது .டிச.15ம் தேதி மகளிர் வண்ணக் கோலமிடுதல் நிகழ்ச்சியும், சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாவிளக்கு பூஜையும் நடந்தது. இரவு திருவிளக்கு பூஜையும், உற்சவர் திருவீதியுலாவும்நடந்தது. விழாவின் சிகர நிகழ்வான கள்ளர்வெட்டு திருவிழா இன்று (டிச.16ம் தேதி) மாலை 4 மணியளவில் நடக்கிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 

முன்னதாக இன்று காலை 108 பால்குடம் பவனியும், தொடர்ந்து தாமிரபரணி தீர்த்தம் வெள்ளிக்குடத்தில் எடுத்து வருதல், கற்குவேல் அய்யனார், பேச்சியம்மனுக்கும் முளைப்பாரி எடுத்து வருதல் மதியம் சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடந்தது.  இன்று மாலையில், தேரியில் ஆயிரக்கணக்கான  பக்தர்கள் நடுவே கள்ளர்வெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி இணையர் ரோஜா- சுமதா, தக்கார் விஸ்வநாத், இணை ஆணையர் பரஞ்ஜோதி, கோயில் செயல் அலுவலர் இசக்கியப்பன் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Johnson's Engineers

New Shape Tailors

Universal Tiles Bazar

selvam aqua
Thoothukudi Business Directory