» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இந்தியாவில் 2025 க்குள் காசநோய் ஒழிக்க இலக்கு : விழிப்புணர்வு முகாமில் தகவல்

சனி 16, டிசம்பர் 2017 10:44:24 AM (IST)இந்தியாவில் 2025 ம் ஆண்டிற்குள் காசநோய் ஒழிக்க இலக்கு நிர்ணயி க்கப்பட்டுள்ளதாக காசநோய் விழிப்புணர்வு முகாமில் தெரிவிக்கப்பட்டது.

துாத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லுாரியில் மாணவியர்களுக்கான காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டம் துாத்துக்குடி மாநகர காசநோய் அலகு 2 மற்றும் அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லுாரி இளைஞர் செஞ்சிலுவை  சங்கம் இணைந்து கல்லுாரி மாணவர்களுக்கு நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மருத்துவபணிகள் துணை இயக்குனர் சுந்தரலிங்கம் தலைமை வகித்தார்.மாவட்ட நலக்கல்வியாளர் தங்கவேல், மாவட்ட அரசு மற்றும் தனியார்துறை ஒருங்கிணைப்பாளர் மோகன் முன்னிலை வகித்தனர்.அன்னம்மாள் கல்லுாரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா வரவேற்புரையாற்றினார்.

மருத்துவர் சுந்தரலிங்கம் காசநோய் பரவும் விதம் கண்டறியும் முறைகள்,மற்றும் சிகிச்சை முறைகள் பற்றியும் கல்லுாரி மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.பொதுமக்களிடையே காசநோய் விழிப்புணர்வை இன்றைய தலைமுறையினர் ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். இந்தியாவில் 2025 ம் ஆண்டிற்குள் காசநோய் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்ப ட்டு அந்த இலக்கை அடைய காசநோய் பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் என்றார்.கல்லுாரி பேராசிரியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து காெண்டனர்.பேராசிரியை சுகிர்தகுமாரி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் மதியழகன் செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Johnson's Engineers

Universal Tiles Bazar


New Shape Tailorsselvam aqua
Thoothukudi Business Directory