» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம்: டிச.9-ல் சிறப்பு முகாம்

வியாழன் 7, டிசம்பர் 2017 5:25:43 PM (IST)

மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் நீக்குதல், போன்ற குறைகள் தெரிவித்திட வருகிற 9ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக ஆட்சியர் என்.வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத்திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் பிரதி மாதம் இரண்டாம் சனிக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 2017 மாதத்திற்கான சிறப்பு முகாம் 09.12.2017 அன்று சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.

இந்த முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் நீக்குதல், சேதமடைந்துள்ள அல்லது தொலைந்துபோன மின்னணு குடும்ப அட்டைக்கு புதிய மின்னணு அட்டை பெறுதல் போன்ற குறைகள் முகாமிலேயே உடனுக்குடன் சரிசெய்து வழங்கப்பட உள்ளது. மேலும் மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தரவுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் இம்முகாமில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம்.

தூத்துக்குடி வட்டத்திற்கு தூத்துக்குடி சார் ஆட்சியரும், ஸ்ரீவைகுண்டம் வட்டத்திற்கு தூத்துக்குடி பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளரும், திருச்செந்தூர் வட்டத்திற்கு திருச்செந்தூர் கோட்டாட்சியரும், சாத்தான்குளம் வட்டத்திற்கு தூத்துக்குடி தனித்துணை ஆட்சியரும் (முத்திரை), கோவில்பட்டி வட்டத்திற்கு கோவில்பட்டி கோட்டாட்சியரும், ஓட்டப்பிடாரம் வட்டத்திற்கு தூத்துக்குடி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக மண்டல மேலாளரும், விளாத்திகுளம் வட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட வழங்கல் அலுவலரும், எட்டையாபுரம் வட்டத்திற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரும்; மற்றும் கயத்தார் வட்டத்திற்கு கலால் உதவி ஆணையரும் மேற்பார்வை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில், குறைகள் இருப்பின் மனு செய்து பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

குமரன்Dec 7, 2017 - 10:53:21 PM | Posted IP 59.96*****

தேங்க்ஸ் டுட்டிஒன்லைனி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads





Johnson's Engineers



crescentopticals


Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors



Thoothukudi Business Directory