» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாக்காளர் பட்டியல் முகாம்: டிச.15ம் தேதி வரை நீட்டிப்பு

வியாழன் 7, டிசம்பர் 2017 12:56:09 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், திருத்தம் தொடர்பான முகாம் வருகிற 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆட்சியர் என்.வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில், 01.01.2018-ஐ தகுதி நாளாக கொண்டு நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் 2018-ன் ஒரு பகுதியான சிறப்பு இயக்கமானது, வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் மூலம் 15.11.2017 முதல் தொடங்கி 30.11.2017 வரை நடைபெற்றது. 

தற்போது மேற்படி சிறப்பு இயக்கம் 15.12.2017 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் ஆகியவற்றிற்கான விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட பகுதிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் 15.12.2017 தேதி வரை வழங்கலாம்.  எனவே பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads




New Shape Tailors


Nalam Pasumaiyagam

Johnson's Engineers


Universal Tiles Bazar

selvam aqua



Thoothukudi Business Directory