» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடலில் வீணாக செல்லும் தண்ணீரை திருப்பிவிட வேண்டும்: சாத்தான்குளம் விவசாயிகள் கோரிக்கை!!

வியாழன் 7, டிசம்பர் 2017 10:16:25 AM (IST)கடலில் வீனாக கலக்கும் தண்ணீரை சாத்தான்குளம் பகுதிக்கு திருப்பிவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து தாசில்தாரிடம் மனு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகாவில் மணிமுத்தாறு கால்வாய் குளங்கள் 58ம், மானாவாரி  காடு குளங்கள் 23ம், சடையனேரி கால்வாய் குளங்கள் 5 என 86 குளங்கள் உள்ளன. இந்த குளத்தை நம்பி 1910.35 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதிகள் பெறுகின்றன. சாத்தான்குளம் பகுதி வானம் பார்த்த பூமி என்பதால் குளம் மற்றும் மற்றும் கிணற்று பாசனம் மூலமே விவசாயம் நடந்து வருகிறது. இந்த  ஆண்டு போதிய மழை இல்லாததால் இப்பகுதியில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பாமல் காணப்படுகிறது. 

தற்போது இப்பகுதியில் பெய்த மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு 25 ஆயிரம் கனஅடிக்கு மேலான தண்ணீர் வீணாக கடலுக்கு சென்று வருகிறது. இதனால்  விவசாயிகளின் கோரிக்கை ஏற்று  இப்பகுதி பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ல சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் சாத்தான்குளம் பகுதி பெரியகுளமான  வைரவம்தருவை, புத்தன்தருவை குளங்களுக்கு வந்து சேரவில்லை. இதனால் அந்த குளங்கள் வறண்டு காணப்படுகிறது. இதனால் இந்த குளங்களை நம்பி விவசாயம் பார்த்து வரும் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். 

இந்நிலையில் தூத்துக்குடி, நெல்லை மாவட்ட பம்புசெட் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் விவசாயிகள் சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு தாசில்தார் ராஜீவ் தாகூர் ஜேக்கபிடம் மனு அளித்தனர். அவர் பொதுப்பணித்துறை உதவி பொறியாளரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.அவர் சடையனேரி கால்வாயில் 500 கனஅடி தண்ணீர் தான் விடமுடியும். அந்தளவு தண்ணீர் விடப்பட்டுள்ளது. அருகில் உள்ள குளங்களுக்கு 200 கனஅடி தண்ணீர் விடப்பட்டுள்ளது எனவும், 300 கன அடி தண்ணீர் சாத்தான்குளம், உடன்குடி பகுதிக்கு விடப்பட்டுள்ளது  என தெரிவித்தார். இதற்கு விவசாயிகள், அந்த தண்ணீர் இப்பகுதிக்கு வரவில்லை. 

குறைந்த அளவே வருகிறது. செய்துங்கநல்லூர் அருகில் உள்ள தூதுக்குழி, கிளார்க்குளம் பகுதியில் கடலுக்கு செல்லும் மடை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் தண்ணீர் வீணாக செல்கிறது. என முறையிட்டனர். உடன் தாசில்தார், ஆர்டிஓவிடம் தெரிவித்து தண்ணீர் வரும் அளவை அறிந்து கூடுதலாக தண்ணீர்  விட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதில் சங்க பொதுச் செயலாளர் சரவணன், பொருளாளர் ஜெயமோகன், மாநில சமக பொதுக்குழு உறுப்பினர் சாலமோன், ஒன்றிய சமக செயலாளர் ஜான்ராஜா உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து  விவசாயிகள் கூறுகையில், இப்பகுதிக்கு முறையாக தண்ணீர் விடப்படவில்லை. இதனால் 25 ஆயிரம் கனஅடிக்கு மேலான தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. அதனை இப்பகுதிக்கு திருப்பிவிட்டால் எப்பகுதி  விவசாயத்துக்கு பயன்பெறும். ஆண்டுதோறும் தண்ணீர் குளத்துக்கு விடுவது பாரபட்சம் காட்டப்பட்டு வருகிறது. ஆதலால் தண்ணீர் திறந்து விடுவது  மற்றும் குளங்களை அளவை  அறிய தனியாக ஐஏஎஸ் அலுவலர் நியமித்து முறையாக எல்லா குளங்களுக்கும் தண்ணீர் கிடைக்க  ஏற்பாடு செய்ய வேண்டும். உடன்குடி தாங்கைகுளம், வைரவன்தருவை , புத்தன்தருவை, படுக்கப்பத்து தருவை குளங்களுக்கு முறையாக தண்ணீர் திறக்ககோரி சாத்தான்குளம் பழைய பஸ் நிலையத்தில் வரும் 14ஆம்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்திட உள்ளதாக தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Johnson's Engineers

Friends Track CALL TAXI & CAB (P) LTD
New Shape Tailors


crescentopticalsThoothukudi Business Directory