» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் காலாவதி உணவு பொருட்கள் பறிமுதல்

புதன் 6, டிசம்பர் 2017 8:30:54 AM (IST)



திருச்செந்தூரில் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள காலாவதியான பொருட்கள் பறிமதல் செய்யப்பட்டது.

திருச்செந்தூர் பகுதியில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அமுதா உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் ஆலோசனையின் பேரில் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் தங்கவிக்னேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்கள் திருச்செந்தூர் பொன்முத்து ஞானசேகர், காயல்பட்டினம் குருசாமி, உடன்குடி கணேஷ்குமார் ஆகியோர் திருச்செந்தூர் கீழரதவீதியில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஆய்வு செய்தனர். அப்போது காலாவதியான பிஸ்கட், குளிர்பானங்கள், திண்பண்டங்கள் உள்ள 30 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் தங்கவிக்னேஷ் கூறியதாவது: திருச்செந்தூர் பகுதியில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவலின் அடிப்படையில் கீழரதவீதியில் உள்ள கடையில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் மீது சட்டரீதியாக வழக்கு தொடரப்படும். திருச்செந்தூர் பகுதியில் உணவு பாதுகாப்பு துறையில் லைசென்ஸ் எடுக்காதவர்கள் வரும் டிச. 31ம் தேதிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஜனவரி மாதம் முதல் லைசென்ஸ் எடுக்காத உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

KKKKKKDec 8, 2017 - 06:19:50 PM | Posted IP 117.2*****

AHA

சாமான்யன்Dec 6, 2017 - 04:31:22 PM | Posted IP 117.2*****

Why not regular raids officers?

கணேஷ்Dec 6, 2017 - 12:05:10 PM | Posted IP 106.2*****

தூத்துக்குடியிலும் ரெய்டு நடக்குமா ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads



Joseph Marketing


New Shape Tailors



crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory