» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கனமழை: பழமையான அரச மரம் வேரோடு சாய்ந்தது - 21 வீடுகள் சேதம்

வெள்ளி 1, டிசம்பர் 2017 10:51:39 AM (IST)



தூத்துக்குடியில் பெய்த கனமழையில் வேம்படி இசக்கியம்மன் கோயில் அருகே இருந்த பழமையான அரச மரம் வேரோடு சரிந்தது. 

தூத்துக்குடியில் கடந்த 3 நாட்களாக அடை மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. இந்நிலையில், தூத்துக்குடி வேம்படி இசக்கியம்மன் கோயில் முன்பிருந்த சுமார் 50ஆண்டுகள் பழமையான அரச மரம் இன்று அதிகாலை வேரோடு சாய்ந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை. பின்னர் அந்த மரம் அங்கிருந்து வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. 

மழை சேதம் விபரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக 21 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன. மாவட்டம் முழுவதும் 51 மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. மீளவிட்டான் அருகே மின்கம்பம் விழுந்தபோது, அப்பகுதியில் புல் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது.  மாவட்டத்தில் 2 லட்சத்து 16 ஆயிரம் வாழைகள் சேதம் அடைந்துள்ளன. 

கடல் பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடு ஒன்று மோதியதில், 22 படகுகள் சேதம் அடைந்தன. மேலும் புன்னக்காயல் பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற 4 மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors



crescentopticals



Joseph Marketing



Thoothukudi Business Directory