» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தொடர் மழை... சாலைகளில் வெள்ளம் : 2 வீடுகள், 12 படகுகள் சேதம்

வியாழன் 30, நவம்பர் 2017 11:28:23 AM (IST)



தூத்துக்குடியில் விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. 2 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தது.

தூத்துக்குடியில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது. நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி விவிடி பள்ளி அருகே, பழைய மாநகராட்சி அலுவலக வளாகம், பாளை ரோடு, மட்டக்கடை, மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால், பல பகுதிகளில் மரம் சாய்ந்து விழுந்தது. மின்கம்பங்களும் சரிந்து மின்சாரம் தடைபட்டது. 



ஸ்ரீவைகுண்டம் - ஏரல் ரோட்டில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி சத்யா நகரில் ரூபி என்பவரது வாகை மரம் சாய்ந்தது. இதில் 2 ஓட்டு வீடுகள் சேதம் அடைந்தனர். சண்முகபுரம் மெயின் ரோட்டில் பூவரசம் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், மின் கம்பம் மீது மரம் விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. திரேஸ்புரம் கடற்கரையில் நிறுத்தியிருந்த நாட்டுப் படகுகள், கடல் சீற்றம் காரணமாக ஒன்றோடு ஒன்று மோதி 12 படகுகள் சேதம் அடைந்தன. தூத்துக்குடி, அருகே புதுக்கோட்டையிலிருந்து கூட்டாம்புளி செல்லும் சாலையின் குறுக்கே உடை மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads




Universal Tiles Bazar


selvam aqua


Nalam Pasumaiyagam

Johnson's Engineers

New Shape Tailors



Thoothukudi Business Directory