» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெளிநாட்டு மணல் இறக்குமதிக்கு நீதிமன்றம் அனுமதி : தமிழக மணல் குவாரிகளை மூட அதிரடி உத்தரவு!!

புதன் 29, நவம்பர் 2017 11:30:46 AM (IST)தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்துக்குள் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்யவும் உயர்நீதிமன்ற கிளை அனுமதி அளித்துள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமையா என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது; அதை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இம்மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்தது. அதில், தமிழகத்தில் இயங்கும் அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாத காலத்துக்குள் இழுத்து மூட வேண்டும்; புதிய மணல் குவாரிகளை திறக்க தடை விதிக்கப்படுகிறது.

மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. தமிழகத்தின் தேவை கருதி வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்யலாம். தமிழகத்தின் ஆறுகள் பாழாவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை. இது இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கை என தெரிவித்துள்ளது மதுரை உயர்நீதிமன்ற கிளை. மேலும் மணல் கடத்தலைத் தடுக்க சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து

தமிழன்Dec 4, 2017 - 11:07:42 AM | Posted IP 61.2.*****

நல்ல தீர்ப்பு.மணல் கோரி எடுக்க படும் மணலால் (ஆறு /குளம் ) ஆபத்து நேரிடும்

பூபாலன்.கே ஜேNov 29, 2017 - 02:31:40 PM | Posted IP 122.1*****

நல்ல தீர்ப்பு நன்றி வாழ்க வளமுடன்

தமிழ்ச்செல்வன்Nov 29, 2017 - 01:37:40 PM | Posted IP 117.2*****

தீர்ப்பை பார்த்தா ஜட்ஜு அய்யாவை எப்படி கவனிச்சு இருக்கீங்கன்னு தெளிவா தெரியுது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Adscrescentopticals

New Shape Tailors

Joseph MarketingFriends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory