» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இளம்பெண்ணை வெட்டிக்கொன்ற மாமியார் நீதிமன்றத்தில் சரண்

திங்கள் 27, நவம்பர் 2017 5:07:32 PM (IST)

தூத்துக்குடியில் இளம்பெண்ணை வெட்டிக் காொலை செய்த மாமியார் கோவில்பட்டி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். 

தூத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையர் காலனியை சேர்ந்தவர் அகமது ராஜா. இவருடைய 2–வது மனைவி கவிதா (24). அகமது ராஜா அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து உள்ளார். கவிதாவுக்கு ஏற்கனவே சமுத்திரம் என்பவருடன் திருமணம் ஆகி 7 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிதா சமுத்திரத்தையும், அந்த குழந்தையையும் பிரிந்து வாழ்ந்து வந்தார். அப்போது, முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த அகமது ராஜாவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு காதலித்து 2–வதாக திருமணம் செய்து கொண்டார். இது அகமது ராஜாவின் தாய் பாத்திமாவுக்கு (49) பிடிக்கவில்லை. 

இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 25ம் தேதி மாலை, மாமியார்–மருமகள் சண்டையில்,  கவிதாவை பாத்திமா வெட்டிக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார். இது தொடர்பாக தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தலைமறைவாக இருந்த பாத்திமாவை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், கோவில்பட்டி ஜேஎம் 2 நீதிமன்றத்தில் மாஜிஸ்ட்ரேட் சுதர்சன் முன்னிலையில் பாத்திமா சரண் அடைந்தார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். மேலும், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தூத்துக்குடி வடபாகம் போலீசார் மனு அளிக்க உள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads








New Shape Tailors


Johnson's Engineers

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory