» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து பிறந்தநாள் விழா: அரசியல் கட்சியினர் சிலைக்கு மாலை அணிவிப்பு

புதன் 15, நவம்பர் 2017 11:33:00 AM (IST)தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்துவின் 148–வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சியினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.   

தூத்துக்குடி மாநகருக்கு முதன் முதலில் குடிதண்ணீர் திட்டம் கொண்டு வந்தவரும், முன்னாள் நகர தந்தையுமான மறைந்த ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்துவின் 148–வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடியில் டபிள்யூ ஜி.சி. சாலையில் உள்ள குரூஸ் பர்னாந்து திருவுருவ சிலைக்கு மாவட்ட  அதிமுக சார்பில் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜு மாலை அணவித்து மரியாதை செலுத்தினார். 

அதிமுக மாவட்ட செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ மோகன், மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் பிடிஆர் ராஜாகோபால், பகுதி செயலாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதிமுக அம்மா அணி சார்பில் மாவட்ட மகளிர் அணிச் செயலளார் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட துணைச் செயலாளர் பாலன், கிழக்குப் பகுதிச் செயலாளர் எட்வின் பாண்டியன், வழக்கறிஞர் நம்பிராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன், மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்த சேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரதீப், மாவட்ட துணைச் செயலளார் ராஜ்மோகன் செல்வின், முன்னாள் கவுன்சிலர்கள் கோட்டுராஜா, கீதாமுருகேசன், ஜெயசிங், ராமகிருஷ்ணன், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் டேனியல்ராஜ், சுடலையாண்டி, வர்த்தக அணி செயலாளர் டேவிட் பிரபாகரன், தொழிற்சங்க தலைவர் சுரேஷ், நிர்வாகிகள் கோபால், பாரகன் அந்தோணி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தெற்கு மாவட்ட தலைவர் எஸ்டிஆர் விஜயசீலன், மாநகர தலைவர் எடிசன், உட்பட பலர் மாலை அணிவித்தனர். 

குரூஸ்பர்னாந்து பேரவை சார்பில் தலைவர் ஹெர்மன் கில்டு, செயலாளர் சசிகுமார், பொருளாளர் சுதாகர், அமைப்பாளர் எட்வின் பாண்டியன் உட்பட பலர் மாலை அணிவித்தனர். பரதர் நல மக்கள் பேரவை சார்பில் தலைவர் அல்போன்ஸ், பொதுச் செயலளார் சுரேஷ், பொருளாளர் ஜெயந்தோ, உட்பட பலர் மாலை அணிவித்தனர்.  சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வடக்கும மாவட்ட செயலளார் வின்சென்ட், மாநகர செயலளார் பிரபாகரன் உட்பட பலர் மாலை அணிவித்தனர். 

நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, மண்டல தலைவர் வெற்றிசீலன், வீரதமிழர்கள் முன்னணி கலரையரசன் மற்றும் நிர்வாகிகள் குரூஸ் பர்னாந்து சிலைக்கு மாலை அணிவித்து, "தமிழகத்தில் தமிழர் ஆட்சி அமைய வேண்டும்" என உறுதி மொழி எடுத்தனர். மேலும், ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து பேரவை சார்பில் பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு தினகரன் அணி கிழக்கு மண்டல செயலாளர் தினகரன், இக்னேஷியஸ், சசிகுமார் ஆகியோர் அன்னதானம் வழங்கினர். தூத்துக்குடி பழைய மாநகராட்சியில் உள்ள குரூஸ் பர்னாந்துவின் திருஉருவ சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட இளைஞர் முன்னேற்ற அணியினர் மாலை அணிவித்தது மரியாதை செலுத்தினார்.  தூத்துக்குடி மாவட்ட இளைஞர் முன்னேற்ற அணியின் செயலாளர் அ.அக்னல் ராஜூவ், துணை செயலாளர் சா.சோபன் பாலசிங்,மாவட்ட அமைப்பாளர் மைவின், சகாயம், ரால்ஸ்டன், ரூபஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். வஉசி பேரவை சார்பில் தமிழ்செல்வன், ஓம்சக்தி சங்கர், வழக்கறிஞர் சங்கர் ஆகியோரும், தேவர் பேரவை சார்பில் கார்த்திக் ராஜா, பழனிராஜா ஆகியோரும் குரூஸ் பர்னாந்து சிலைக்கு மாலை அணிவித்தனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Johnson's EngineersNew Shape Tailors


selvam aqua

Universal Tiles Bazar

CSC Computer Education

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory