» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் குழந்தைகள் தினவிழா

செவ்வாய் 14, நவம்பர் 2017 6:48:33 PM (IST)



தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாப்பட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் ஆண்டு தோறும் சிறப்பாக குழந்தைகள் தின விழா கொண்டாப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் வேதாந்தா குஷி சைல்டு கேர் சென்டர் குழந்தைகளுக்காக குழந்தைகள் தின கொண்டாட்டம் நடைபெற்றது. ஸ்டெர்லைட்டின் சார்பில் 10 குஷி சைல்டு கேர் சென்டர்களில் உள்ள 315 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பு, உடல்நலப் பராமரிப்பு மற்றும் நர்சரி கல்வி ஆகியவற்றை வழங்கி குழந்தைகளின் போஷாக்கு மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

விழாவிற்கு தலைமை வகித்து சமூக நல அலுவலர் ஜெய்சூர்யா தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அதிகாரி முத்து லட்சுமி, ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமை பாதுகாவலர் சுமித் பர்மன், தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் கைலாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்ச்சியின் துவக்கத்தில் குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமியருக்காக சிறப்பு மேஜிக் ஷோ நடைபெற்றது. இதனை தொடர்ந்து குழந்தைகள் தங்களின் கலாசார திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

இதில் குழந்தைகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், திட்ட அலுவலர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் போன்ற பலர் கலந்துகொண்டனர். ஸ்டெர்லைட் லேடீஸ் கிளப் உறுப்பினர்களும் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

New Shape Tailors


selvam aqua

Johnson's Engineers


CSC Computer Education

Nalam Pasumaiyagam


Universal Tiles Bazar



Thoothukudi Business Directory