» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துாத்துக்குடி வரும் முதல்வரை முற்றுகையிடுவாேம் : விவசாயிகள் சங்கத்தினர் பேட்டி

செவ்வாய் 14, நவம்பர் 2017 2:10:14 PM (IST)

துாத்துக்குடி வரும் முதல்வர் ஈபிஎஸ்க்கு கருப்புக்கொடி காட்டி முற்றுகையிடுவோம் என தமிழக விவசாய சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தமிழக விவசாய சங்கம் சார்பில் அதன் மாநில தலைவர் நாராயணசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். மனு வில் துாத்துக்கடி மாவட்டத்தில் 2015 16 ம் ஆண்டிற்குரிய பயிர்க்காப்பீடு இழப்பீடு தொகை ஒதுக்கீட்டில் வேளாண்மைதுறை சார்பில் பெரும் முறைகேடுகள் நடத்தப்பட்டுள்ளது.

விளாத்திகுளம்,புதுார் ஆகிய 2 பிர்காகளை தவிர மற்ற பிர்க்காக்களுக்கு ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை.இந்த ஒதுக்கீட்டில் பெரிய அளவில் ஊழல் நடந்ததாக கருதுகிறோம்.எனவே மீண்டும் கணக்கெடுப்பு செய்து விட்டுப்போன மக்காச்சோளம் கம்பு உளுந்து பாசிப்பயிறு உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.மேலும் முறைகேடுகளை சிபிஐ மூலம் விசாரிக்க வேண்டும்.இது குறித்து மாவட்ட ஆட்சியர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்க நிர்வாகிகள்,வரும் 20 ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 22 ம் தேதி துாத்துக்குடி வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஆயிரக்கணக்கான விவசாயிகள் கருப்புக்கொடியுடன் முற்றுகையிடுவோம் என்று கூறினார்.


மக்கள் கருத்து

குமரன்Nov 14, 2017 - 02:48:16 PM | Posted IP 171.4*****

தமிழக விவசாயிகள் சங்கம் கிடையாது. தமிழ் விவசாயிகள் சங்கம். அதன் தலைவர் தான் நாராயணசாமி.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Johnson's Engineers

selvam aqua


CSC Computer Education


Nalam Pasumaiyagam



Sterlite Industries (I) Ltd

New Shape Tailors

Universal Tiles Bazar



Thoothukudi Business Directory