» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விவசாயிகளுக்கான துரித மின் இணைப்பு திட்டம்: ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு

செவ்வாய் 14, நவம்பர் 2017 11:36:01 AM (IST)

தாட்கோ மூலம் பழங்குடியினர் இனத்தை சார்ந்த விவசாயிகளுக்காக செயல்படுத்தப்படும் துரித மின் இணைப்பு வழங்கும் (Fast Track Power Supply) திட்டத்திற்கு இணையதளம் மூலம்  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக ஆட்சியர் என்.வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது : விண்ணப்பதாரர் பழங்குடியினர் விவசாயியாக இருக்க வேண்டும்.  குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். நிலம் விண்ணப்பதாரருக்கு சொந்தமாக இருப்பதுடன், அவரது பெயரில் நிலப்பட்டா இருக்க வேண்டும். மேற்கண்ட நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய்கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.  தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின்இணைப்பு கோரி விண்ணப்பத்திருக்க வேண்டும். மேற்கண்ட திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் http://fast.tahdco.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும். 

பதிவு செய்யும்போது விண்ணப்பதாரர் பற்றிய விபரங்களுடன் குடும்ப அட்டை அல்லது இருப்பிட சான்று, சாதிச்சான்று, வருமானச்சான்று, கல்வித்தகுதி மற்றும் வயதிற்கான ஆதாரச்சான்றிற்கு (பள்ளி மாற்றுச்சான்று/ வாக்காளர் அட்டை/ ஒட்டுநர் உரிமம்/ பான்கார்டு/ ஆதார் அட்டை/ மதிப்பெண்சான்று) இவற்றில் ஏதாவது ஒன்றை அதற்கான இடத்தில் குறிப்பிட்டு விண்ணப்பதாரருக்கு சொந்தமாக இருக்கும் நிலப்பட்டா (ம) சிட்டா அடங்கல் நகல், "அ"பதிவேடு நகல், நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய்கிணறு அமைக்கப்பட்டதற்கான நிலத்தின் வரைப்படம், சர்வே எண், மின்வாரியத்தில் பதிவு செய்த ரசீது நகல், கிணறு அமையப்பெற்றுள்ள கிராமம், மோட்டார் குதிரைதிறன் விபரம், சம்மந்தப்பட்ட மின்வாரிய கோட்டம் ஆகிய விபரங்களுடன் புகைப்படத்தையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைப்படுபவர்களின் வசதிக்காக  தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் ரூ.20/- செலுத்தி விண்ணப்பிக்க வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ்   கேட்டுகொண்டுள்ளார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Johnson's EngineersFriends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors

crescentopticals

Thoothukudi Business Directory