» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துாத்துக்குடியில் பைக் ரேசால் நடைபெற்ற விபரீதம் : தனியார் நிறுவன மேலாளர் பரிதாப சாவு

திங்கள் 13, நவம்பர் 2017 1:36:09 PM (IST)
துாத்துக்குடியில் அதி வேகமாக வந்த பைக் மோதியதில் தனியார் நிறுவன மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெனிஸ்டன் (36). தனியார் நிறுவன மேலாளராக பணிபுரிந்து வந்தார்.. இவருக்கு மனைவியும், ஒரு வயதில் மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டுக்கு ஜெனிஸ்டன் பைக்கில் திரும்பிக்கொண்டிருந்தார். பீச்ரோட்டில் வந்தபோது எதிரே வந்த மற்றொரு பைக் இவரது பைக் மீது மோதியது. 

இதில் பலத்த காயமடைந்த ஜெனிஸ்டன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் விபத்துக்கு காரணமான மற்றொரு பைக்கில் வந்த மேல அரசரடியை சேர்ந்த விக்னேசும் (26) கால்டுவெல் காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே சிகிச்சை பலனின்றி நேற்றிரவு ஜெனிஸ்டன் இறந்தார். இச்சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பைக் ரேசால் நடந்த விபரீதம்

துாத்துக்குடியில் தற்சமயம் வாலிபர்கள் பலர் ஒன்று சேர்ந்து அனுமதியில்லாமல் பைக் ரேஸ் நடத்துவது அதிகரித்துள்ளது.இது பெரும்பாலும் பீச் ரோட்டில் தான் நடக்கும்.ஒரு இடத்திலிருந்து அவர்கள் தேர்வு செய்யும் மற்றொரு இடத்திற்கு பைக்கில் யார் முதலில் செல்கிறார்களாே அவர்களே வெற்றியாளர்கள்.சம்பவம் நடந்த அன்றும் இது போல் பைக் ரேஸ் நடந்துள்ளது.அப்போது அதி வேகத்தில் ட்யூக்,பல்சர் உள்ளிட்ட பைக்குகளில் வாலிபர்கள் சென்றுள்ளனர்.

பீச் ரோடு வரும் போது தான் இந்த கோர விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.எனவே துாத்துக்குடியில் இனிமேல் அனுமதியின்றி இது போல் பைக் ரேஸ் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களது லைசன்சை நிரந்தமாக தடை செய்ய மாவட்ட போலீசாருக்கு துாத்துக்குடி மாவட்ட எஸ்பி., உத்தரவிட வேண்டுமென விபத்தை பார்த்த அங்கிருந்தவர்களும்,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வழக்கை திசை திருப்ப போலீஸ் முயற்சி ? உறவினர்கள் குற்றச்சாட்டு


இறந்த ஜெனிஸ்டனின் நண்பர் ஒருவர் நமது நிருபரிடம் தெரிவித்ததாவது, விபத்தில் சிக்கிய போது ஜெனிஸ்டன் ஹெல்மட் அணிந்துள்ளார்.மேலும் தனது பைக்கிற்குரிய அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருந்துள்ளார். அவர் ஹெல்மட் அணியாமல் பைக் ஓட்டவே மாட்டார். ஆனால் தற்போது போலீசார் ஜெனிஸ்டன் ஹெல்மட் அணியவில்லை என வழக்கை திசை திருப்புகின்றனர். ஜெனிஸ்டன் மீது மோதிய பைக்கின் உரிமம் அந்தவண்டியை ஓட்டி வந்த வாலிபரின் தாயாரின் பெயரில் இருப்பது குறிப்பிடத்தகக்கது.எனவே இவ்வழக்கில் இறந்த ஜெனிஸ்டன் தரப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

பூமிநாதன் .கேDec 12, 2017 - 07:58:37 PM | Posted IP 42.11*****

தயவு செய்து வேகமாக செல்லாதீர்கள் .உங்கள் உயிரையும் மற்ற உயிர்களை யும்் காப்பாற்றுஙகள் .

JANAKINov 15, 2017 - 04:05:20 PM | Posted IP 171.4*****

போலீஸ் காசு வாங்கிட்டு வாங்கிட்டு வேலை பாக்குறாங்க என்னைக்கு நாட்டு மக்களுக்காக வேலை பாக்குறாய்ங்கங்களோ அன்னைக்கு தா நாடு வல்லரசா ஆகும். போலீஸ் மேல மதிப்பு வரும் மக்களுக்கு

M.muthu krishnanNov 15, 2017 - 08:25:08 AM | Posted IP 157.5*****

Police money a vankitu thana ethellam nadaka viduranga,Police ku theriyamala nadakuthu

ஜாய்சன் (மாநகர தலைவர் SFI)Nov 14, 2017 - 08:27:40 AM | Posted IP 157.5*****

நடவடிக்கை எடுக்குமாறு இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாநகரக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

LegionNov 13, 2017 - 09:38:16 PM | Posted IP 157.5*****

Nothing will happen regarding this. Money will shut the mouth of the officers.

Comon manNov 13, 2017 - 07:32:38 PM | Posted IP 27.62*****

Police paisa vangittanga Pola Chi irhulam oru polappa oru uiyre poium kasu vangurangalee Avanga kudumbathukku kasu vngi koduthalum pona uiyre வருமா 😖😖

SeruppuNov 13, 2017 - 07:06:12 PM | Posted IP 42.11*****

Kill the bike racers on the spot....they must die....their family should cry forever.....

ValanNov 13, 2017 - 05:54:14 PM | Posted IP 27.62*****

இனி அந்த குழந்தைக்கும், அந்த சகோதரிக்கும் யார் பொறுப்பு

ஜெனிகர்Nov 13, 2017 - 05:22:31 PM | Posted IP 106.2*****

இது போல அதிவேகமாக பைக் ஓட்டுபவர்களை பொதுமக்கள் அடித்து துவைக்க வேண்டும்.

TuticorianNov 13, 2017 - 04:40:03 PM | Posted IP 103.2*****

Nowadays, bike race on the beach road takes place very often, especially in the afternoons. Reckless driving by the racers may take the lives of innocent road users. Hope the officers concerned would take stringent action against those violators of road/traffic rules so as to avoid further casualty.

JohnsonNov 13, 2017 - 02:53:09 PM | Posted IP 42.11*****

காவல்துறை இந்த விஷயத்தில் பணக்காரர்கள் ,செல்வந்தர்ககளுக்கு சாதகமாகவே செயல் படுகின்றனர்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

crescentopticals
Joseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors
Thoothukudi Business Directory