» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிவன்கோயில் திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் : தூத்துக்குடியில் கோலாகலம்

சனி 11, நவம்பர் 2017 12:14:00 PM (IST)



தூத்துக்குடியில் சிவன்கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தூத்துக்குடி நகரின் மையபகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவன்கோவில் என்று அழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை - சங்கர ராமேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு இத்திருவிழா இம்மாதம் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாநாட்களில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தார். முக்கிய நிகழ்வான தேரோட்டம் 9ம்நாளான இன்று நடந்தது. இதையொட்டி காலை 7 மணிக்கு பாகம்பிரியாள் அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம், தீபாராதனை நடந்தது. 



காலை 9 மணிக்கு அம்பாள் தேருக்கு எழுந்தருளியதும் 10 மணிக்கு தேரோட்டம் நடந்தது. பெருங்குளம் செங்கோல் ஆதீனத்தின் 103-வது குருமகா சன்னிதானமாக சிவப்பிரகாச தேசீன சத்தியஞான பரமாச்சார்ய சுவாமி முன்னிலையில், கீதாஜீவன் எம்எல்ஏ வடம் பிடித்து தேராட்டத்தை தொடங்கி வைத்தார். தேருக்கு முன்னால் நாட்டுப்புற கலைஞர்களின் ஒயிலாட்டம், பொய்க்கால்குதிரை, கும்மியாட்டம், சிலம்பாட்டம் நடந்தது. கேரளாவின் செண்டைமேளம் இசைக்கப்பட்டது. கீழரத வீதியில் துவங்ிகி தேர்தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக தேரோட்டம் நடைபெற்றது. 

விழாவில், தொழிலதிபர்கள் ஏவிஎம் மணி, பிஎஸ்எஸ்கே ராஜா சங்கரலிங்கம், பழரசம் விநாயகமூர்த்தி, ஆ.திருச்சிற்றம்பலம், அபிராமி சந்திரசேகர், இபி பழனியப்பன், முன்னாள் கவுன்சிலர்கள் ஏ.கோட்டுராஜா, சுரேஷ்குமார், செந்தில்குமார், உட்பட  ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி அஜித், சிவன் கோயில் பிரதான பட்டர் செல்வம், மற்றும் திருவிழா கமிட்டியினர் செய்து வருகின்றனர். மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals




Friends Track CALL TAXI & CAB (P) LTD



Joseph Marketing


New Shape Tailors



Thoothukudi Business Directory