» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பெண் போலீசிடம் 4பவுன் நகை பறிப்பு : நள்ளிரவில் வீடுபுகுந்து மர்ம நபர் கைவரிசை!!

வியாழன் 26, அக்டோபர் 2017 11:39:44 AM (IST)

தூத்துக்குடியில் நள்ளிரவில் வீடுபுகுந்து பெண் போலீசிடம் 4பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி, மடத்தூர் ரோடு முருகேசன் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி சுப்புலட்சுமி (32). இவர் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் காவலராக வேலைபார்த்து வருகிறார். நேற்றிரவு வீட்டில் தூங்கிய சுப்புலட்சுமி, காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்திருந்தாராம். அப்போது நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், சுப்புலட்சுமி கழுத்தில் கிடந்த 5பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றாராம். 

அப்போது திடுக்கிட்டு விழித்த சுப்புலட்சுமி, சுதாகரித்துக் கொண்டு செயினை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு திருடனுடன் போராடியுள்ளார். இதில், 1 4பவுன் டாலர் மட்டும் சுப்புலட்சுமியுடம் மிஞ்சியது. 4பவுன் செயினுடன் மர்ம நபர் தப்பியோடி விட்டார். இதன் மதிப்பு சுமார் ரூ.1லட்சம் ஆகும். இதுகுறித்து புகாரின் பேரில், சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் வீடுபுகுந்து, பெண் போலீசிடமே நகை பறிக்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

NomanOct 26, 2017 - 03:10:24 PM | Posted IP 82.19*****

Attaya potanungala, ipovavadhu thirudana kandu pudinga...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Nalam Pasumaiyagam

selvam aqua

Johnson's Engineers

CSC Computer Education

Universal Tiles Bazar


New Shape Tailors






Thoothukudi Business Directory