» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மூன்று லட்சம் மதிப்புள்ள விறகு தீ வைத்து எரிப்பு : போலீஸ் விசாரணை

வியாழன் 12, அக்டோபர் 2017 7:41:09 PM (IST)




தென்திருப்பேரை செங்கல் தொழிற்சாலையில் 100டன் விறகு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள தென்திருப்பேரையில் தனியாருக்கு சொந்தமான செங்கல் உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. தற்போது மழைக்காலம் நெருங்கி விட்டதால் பச்சை மண்ணில் உருவான செங்கல்களை சுட்டு எடுத்து பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்காக சுமார் 200டன் விறகு வாங்கி வரப்பட்டு தொழிற்சாலையின் உட்பகுதியில் மலை போல குவித்து வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று அதி காலை 3மணியளவில் சேமித்து வைக்கப்பட்டிந்த விறகு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவஇடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை தடுத்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.3லட்சம் மதிப்பிலான சுமார் 100டன்னுக்கும் அதிகமான விறகுகள் எரிந்து சாம்பலானது.இதுகுறித்து செங்கல் உற்பத்தி தொழிற்சாலையின் மேலாளர் ஜேசுதாஸ் ஆழ்வார் திருநகரி போலீசில் புகார் கொடுத்தார். 

புகாரின்பேரில் சப்இன்ஸ்பெக்டர் பால்ஐசக் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையின்போது மாவடிப்பண்ணையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரது மகன் தெய்வசுந்தரம்(45) தான் சேமித்து வைக்கப்பட்டிருந்த விறகினை தீ வைத்து எரித்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து சப்இன்ஸ்பெக்டர் பால்ஐசக் தெய்வசுந்தரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். முன்பகை காரணமாக ரூ.3லட்சம் மதிப்பிலான விறகு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals


New Shape Tailors





Joseph Marketing



Thoothukudi Business Directory