» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் திடீர் மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

வியாழன் 12, அக்டோபர் 2017 4:44:52 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாலை திடீரென பலத்த மழை பெய்தது. 

தூத்துக்குடியில் இன்று மாலை 2 மணிளவில் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணிநேரம் நீடித்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. தூத்துக்குடி டபிள்யூ.ஜி.சி. ரோடு, தெற்கு ராஜா தெரு, ரயில்நிலைய ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றன. இந்த தண்ணீரில் வாகனங்கள் மிதந்தபடி சென்றன. 

இது போல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது.  கயத்தாறு, கோவில்பட்டி பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் பகுதிகளிலும் இன்று திடீரென மழை பெய்தது. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் காற்றுடன் பெய்த பலத்த மழையில் கருங்குளத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழை தள்ளிய வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Johnson's Engineers



selvam aqua

New Shape Tailors

Nalam Pasumaiyagam

Universal Tiles Bazar

Sterlite Industries (I) Ltd

CSC Computer Education



Thoothukudi Business Directory