» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் 2வது நாளாக மினிபஸ்கள் ஸ்ட்ரைக் : பொதுமக்கள் பாதிப்பு

வியாழன் 12, அக்டோபர் 2017 4:06:54 PM (IST)



கோவில்பட்டியில் மினிபஸ்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவில்பட்டி நகரில் 29 மினிபஸ்கள் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 24 பஸ்கள் பஸ் நிலையத்தின் உள் பகுதியில் இருந்தும் மற்ற பஸ்கள் பஸ் நிலையத்தின் வெளிப்பகுதியில் இருந்தும் இயங்குவதற்கு அனுமதி பெற்றுள்ளன. கோவில்பட்டி அண்ணாபஸ் நிலையம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு, பஸ் இயக்கப்பட்டு வருகின்றனர். மினிபஸ்கள் கிழக்கு பகுதி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தன. 

பஸ் நிலையத்திற்கு மினிபஸ்கள் வருவதால் அரசு பஸ்கள் இயக்க முடியவில்லை, இடம் நெருக்கடி ஏற்படுகிறது, மேலும் அரசு பஸ்கள் நேரத்தில் மினிபஸ்கள் செல்கின்றன. எனவே மினிபஸ்களை பஸ் நிலையத்திற்குள் உள்ளே அனுமதிக் கூடாது என்று அரசு பஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கிழக்கு பகுதி பஸ் நிலையத்தின் முன்பகுதியில் இருந்து மினிபஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. அதன் படி நேற்று பஸ் நிலையத்தின் முன்பகுதியில் இருந்து மினிபஸ்களை இயக்க வருவாய்துறை மற்றும் போக்குவரத்து அலுவலர்கள் அறிவுறுத்தினர். 

ஆனால் மினிபஸ் உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீடீரென நேற்று வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளது மட்டுமின்றி தங்களது மினிபஸ்களை வட்டார போக்குவரத்து அலுவலகம் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து 2வது நாளாக இன்று மினிபஸ் உரிமையாளர்கள் தங்கள் போராட்டத்தினை தொடர்கின்றனர். மினிபஸ்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Johnson's Engineers


selvam aqua

Universal Tiles Bazar


Nalam Pasumaiyagam

New Shape Tailors






Thoothukudi Business Directory