» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இரட்டைக் கொலை வழக்கில் வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

புதன் 11, அக்டோபர் 2017 4:56:43 PM (IST)

தூத்துக்குடி அருகே திருமண பிளக்ஸ் போர்டு வைப்பதில் ஏற்பட்ட தகராறில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

தூத்துக்குடி பிரையன்ட் நகர் 5வது தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் காசிராஜன்(23). சிசிடிவி கேமரா பொருத்தும் தொழில் செய்து வந்தார். இவரது சித்தி மகன், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள குலையன்கரிசலைச் சேர்ந்த  நாராயணன் மகன் ராஜலிங்கம்(20). இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர்களது உறவினரான, புதுக்கோட்டை அருகே பேரூரணியைச் சேர்ந்த பத்மநாதனுக்கு  சாத்தான்குளம் அருகே பண்டாரபுரத்தில் 23.06.16 அன்று திருமணம் நடந்தது. 

திருமணத்திற்கு முன்தினம்,  காசிராஜனும், ராஜலிங்கமும் பேரூரணி வந்தனர். அங்கு இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து திருமண வரவேற்பு பிளக்ஸ் போர்டுகள் கட்டினர். அப்போது பத்மநாதனின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் விக்ரம் (21) என்பவர் வெளியூர்காரர்களான நீங்கள் எங்கள் ஊரில் பிளக்ஸ் போர்டு எப்படி வைக்கலாம் எனக்கூறி  எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு உருவானது. நண்பர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். பின்னர் அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டனர். காசிராஜன், ராஜலிங்கம் இருவரும் அங்குள்ள செந்தூர்பாண்டி என்பவரின் வீட்டின் மொட்டை மாடியில் சென்று படுத்துதூங்கினர்.  

நள்ளிரவில் தூங்கிக் கொண்ருடிந்த இருவரையும் விக்ரம் அரிவாளால் கொடூரமாக வெட்டிக் சராமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து தட்டபாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) சாந்தகுமாரி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். தலைமறைவாக இருந்த விக்ரமை போலீசார் கைது செய்தனர். இந்த இரட்டைக் கொலை வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண் -2ல் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கெளதமன் குற்றவாளி விக்ரமுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து இன்று தீர்ப்பு கூறினார். இதையடுத்து விக்ரமன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாளை சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஏவி முத்து ஆஜரானார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Joseph Marketing



Friends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticals





Thoothukudi Business Directory