» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஒரே மாதத்தில் 52பவுன் நகை, 22 பைக்குகள் மீட்பு : தூத்துக்குடி மாவட்ட எஸ்பி மகேந்திரன் பேட்டி

புதன் 11, அக்டோபர் 2017 3:55:53 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்திற்குள் திருடுபோன 20 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார், 52 பவுன் நகைகள் மீ்ட்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட எஸ்பி மகேந்திரன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி மகேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது : தூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த ஒரு மாதத்திற்குள்ளான வாகன சோதனையில் சந்தேகத்திற்கு இடமான வாகனங்களின் பதிவெண்களை இணையதள வசதியுடன் ஆய்வு செய்ததில் பல திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 12 இருசக்கர வாகனங்களும், ஒரு நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், தனிப்படைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் முள்ளக்காடு நேருஜி நகரைச் சேர்ந்த முருகன் என்ற குருக்காட்டூர் முருகன் (38), எம் சவேரியார் புரத்தைச் சேர்ந்த சாமுவேல் மகன் ஐயனார் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில், இவர்கள் இருவரும் இரு சக்கர வாகன திருட்டுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 8 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

குலசை தசரா விழாவின் போது பக்தர்களிடம் 44 பவுன் நகைகள் திருடப்பட்டது. இது தொடரபாக குலசேகரன்பட்டினம் மற்றும் திருச்செந்தூர் காவல் நிலையங்களில் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் தஞ்சாவூரைச் சேர்ந்த சுகுனா (37) என்பவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து 44 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில், நகையை பறிகொடுத்தவர்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் நகைளை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாளமுத்துநகர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்மணியிடம் 4பேர் கத்தியைகாட்டி மிரட்டி வழிப்பறி செய்தனர். அருகில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை மூலம் காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செ்யதனர். அவர்களிடம் இருந்து 26ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மீட்டுள்ளனர். நாலாட்டின்புதூர் காவல் சரகத்தில் திருடுபோன 1 லட்சத்து ஐயாயிரம் மதிப்பிலான நகைகளை மீட்டு குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் பெரும்பாலான குற்றவாளிக்ள வாகன சோதனை மூலம் சிக்கியுள்ளனர். மேலும்,இணைதளம் வசதி மூலம் குற்றவாளிகள் விரைவாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார். 

மேலும், குற்றவாளிகளை கைது செய்ய சிறப்பாக பணிாயற்றிய திருச்செந்தூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிச்சையா, குலசை ஆய்வாளர் அஜிகுமார், தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் வனிதா ராணி, தனிப்படை உதவி ஆய்வாளர் ஷ்யாம சுந்தர் ஆகியோரை எஸ்பி பாராட்டினார். 


மக்கள் கருத்து

நிஹாOct 12, 2017 - 10:20:46 AM | Posted IP 117.2*****

ஜெ ஜெ நீங்கள் சொல்வது சற்று அதிகமான தண்டனையாக தெரிகிறது. இந்த குற்றவாளிகளை உருவாக்கிய இந்த சமூகத்திற்கும் சீர் கெட்ட அரசியல்வாதிகளுக்கும் என்ன தண்டனை கொடுப்பீர்கள்.

M.HariharanOct 11, 2017 - 07:42:24 PM | Posted IP 101.2*****

No.appadi seithal athu sattathaiysattathaiyum neethimanrathaiyum avamathippathu polagum.avargalai neethimandram moolam sattapadi thandikka uriya nadavadikkai yedukkappadum.

ஜெ ஜெOct 11, 2017 - 04:12:12 PM | Posted IP 37.21*****

இந்த திருடர்களின் புகை படத்தை பெரிய அளவில் பொதுமக்கள் கூடும் இடங்களில் வைத்தால் மிகவும் பிரயோஜனமாக இருக்கும். மேலும் இந்த திருடர்களின் கெண்டை கால் நரம்பையோ அல்லது ஒரு கை நரம்பையோ வெட்டி விட்டால் நல்லது. செய்வீர்களா? அல்லது மீண்டும் வெளிய வந்து அவர்கள் வேலையை தொடர வழிசெய்வீர்களா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTDcrescentopticals

New Shape Tailors


Joseph Marketing

Thoothukudi Business Directory