» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சென்னை - தூத்துக்குடி- கன்னியாகுமரி வரை புதிய ரயில் பாதை: மத்திய அமைச்சர் பொன்னார் பேச்சு

புதன் 11, அக்டோபர் 2017 10:09:30 AM (IST)சென்னையில் இருந்து தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதிய ரயில்பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக‌ மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நெல்லை கிழக்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் பாளையங்கோட்டை ஜவகர் திடலில் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய அவர், தமிழகத்தில் 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. இந்த கூட்டத்தை பார்க்கும் போது, தூய்மையான, நேர்மையான நல்ல ஆட்சி வேண்டும் என்று வந்து இருப்பது தெரிகிறது. மொழியை சொல்லி தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகு மொழிப்போர் தியாகிகளை கைவிட்டு விட்டது. ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு தேடல் இருந்து கொண்டு இருக்கிறது. தற்போது ஊழலற்ற, நேர்மையான ஆட்சி தேவை என்ற தேடல் இருக்கிறது.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மக்களை ஒற்றுமைப்படுத்தி வருகிறது. மோடி, குஜராத் மாநிலத்தில் 13 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அதன்பிறகு தான் பிரதமராக பொறுப்பேற்றார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்ப்பட்டுள்ளன. பாரதீய ஜனதா ஆட்சியில் தங்க நாற்கரை சாலை திட்டத்தில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4 வழிச்சாலைகள் அமைக்கப்பட்டன. மதுரை-கன்னியாகுமரி வரை இரட்டை ரயில்பாதை திட்டத்துக்கு ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வழிப்பாதை மின்மயமாக்கப்படுகிறது.

சென்னையில் இருந்து தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதிய ரயில்பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து இருக்கிறோம். அதேபோல் திருவனந்தபுரத்தில் இருந்து கடல் மார்க்கமாக சென்னை வரை கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தற்போது தமிழகத்தின் நிலை என்ன? என்று எண்ணிப்பார்க்க வேண்டும். கிழக்கு கடற்கரை சாலைக்கு ரூ.10 ஆயிரம் கோடி மத்திய அமைச்சர்நிதின் கட்கரி ஒதுக்குவதற்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால் அந்த சாலை திட்டத்துக்கு இதுவரை தமிழக அரசால் ஒப்புதல் கொடுக்க வில்லை.   தற்போது தமிழகம் மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது. இந்த சரிவில் இருந்து தமிழகத்தை காப்பற்ற வேண்டும். இந்தியாவில் 29 மாநிலங்கள் உள்ளன. இதில் 13 மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. விரைவில் தமிழகத்திலும் தாமரை மலரும். அதற்காக நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் பேசும்போது, "தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஊழல் பெருகி விட்டது. ஊழலை பிரிக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. இந்த நிலை மாற வேண்டும் என்றால் தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி மலர வேண்டும். கட்சியில் கடுமையாக உழைப்பவர்களுக்கு பதவிகள் தேடி வரும்" என்றார்.  தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, "தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தோம். ஆனால் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஏராளமானவர்கள் உயிரிழந்து வருகிறார்கள். இனியும் அரசு தாமதிக்காமல் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

நயினார் நாகேந்திரன் தலைமையில் மாற்று கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்தனர். அவர்களை மத்திய அமைச்சர்பொன.ராதாகிருஷ்ணன் சால்வை அணிவித்து வரவேற்றார். கூட்டத்தில் பாரதீய ஜனதா மாநில செயலாளர் முருகானந்தம், கோட்ட பொறுப்பாளர் தர்மராஜ், விவசாய அணி மாநில பொதுச்செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

unmaiOct 12, 2017 - 12:53:12 PM | Posted IP 82.19*****

ithu chumma lolaiku.. onnum nadakathu...

AiyamperumalOct 11, 2017 - 03:56:01 PM | Posted IP 117.2*****

கன்னியாகுமரி வரை ரயில்வே நீட்டித்தால் கூடுதல் ரயில் விட வாய்ப்பு கிடைக்கும்

உண்மைOct 11, 2017 - 12:26:41 PM | Posted IP 122.1*****

ஜெய் ஹிந்த்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTDcrescentopticals

Joseph Marketing

New Shape Tailors


Thoothukudi Business Directory