» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குலசையில் பள்ளி வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் : 84 குழந்தைகள் உயிர்தப்பினர்

திங்கள் 9, அக்டோபர் 2017 8:24:55 PM (IST)




துாத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பள்ளி வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் பள்ளிகுழந்தைகள் 4 பேர் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.

உடன்குடி தேரியூரைச் சேர்ந்த தனியார் பள்ளிவாகனம் 8 குழந்தைகளுடன் உடன்குடியில் இருந்து தருவைகுளம் சாலை வழியாக குலசேகரன்பட்டினத்திற்கு சென்று கொண்டிருந்தது. பள்ளிவாகனம் குலசை., கிழக்கு கடற்கரை சாலை வழியாக வரும் போது துாத்துக்குடியில் இருந்து 66 மாணவ, மாணவிகள், 2 ஆசிரியர்களுடன் வந்த கொம்மடிக்கோட்டை தனியார் பள்ளி வாகனம் நேருக்கு நேர் மோதியது. இதில் தேரியூர் பள்ளி வாகனம் சாலையின் ஓரத்தில் இருந்த தனியார் முள்கம்பி வேலியை தாண்டி உள்ளே சென்றது. கொம்மடிக்கோட்டை பள்ளி வாகனம் விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 500மீட்டர் தாண்டி ஊரணி அமைப்பதற்காக தோண்டியிருந்த மணல் மோதியபடி நின்றது. 

இதனால் பள்ளி வாகனத்தில் இருந்த குழந்தைகள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த விபத்தில் தேரியூர் பள்ளி வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுனர் வெள்ளாளன்விளை சுதந்திரநகரைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் பாலமுருகன்(34), பள்ளி மாணவர்கள் குலசையைச் சேர்ந்த தனுஷ்கோடி மகன் விஜயசங்கர்(10), அதே ஊரைச் சேர்ந்த மகன் அருண்குமார்(10), கொம்மடிக்கோட்டை பள்ளிவாகனத்தை ஓட்டி வந்த அதே பகுதியைச் சேர்ந்த ரெக்ஸ்(65), பள்ளி மாணவர்கள் பொத்தகாலன்விளையைச் சேர்ந்த சந்தோஷ்ராஜன் மகன் அன்டணி டெனிஸ்ராஜா(18), பூவுடையார்புரம், சந்திரசேகர் மகள் சூர்யா(12) ஆகியோரும் படுகாயமடைந்து திருச்செந்துாரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துகுறித்து குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் அஜுகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

crescentopticals

New Shape Tailors







Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory